முட்டை விலை 5 காசுகள் உயர்வு.. 100 முட்டையின் விலை 350 ரூபாயாக நிர்ணயம்: என்இசிசி
நாமக்கல்: இன்று நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு ஆணையம் தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டையின் விலையை 3.50 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

கடந்த 5 நட்களாக 3.45 ரூபாயாக இருந்த முட்டையின் விலை, 2015ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு ஆணையம் 5 காசுகள் உயர்த்தி 3.50 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.
மார்ச் மாதத்தின் சராசரியாக ஒரு முட்டையின் விலை 3.30 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த விலை உயர்வு அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications