மும்பை: செவ்வாய்க்கிழமை நடக்க உள்ள 2016-17ஆம் ஆண்டின் முதல் இருமாத நாணய மறுஆய்வு கொள்கையில், ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் வணிக வங்கிகளுக்குக் கடன் அளிப்பு விகிதமான ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் வரை குறைக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதனால் வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் என அனைத்துக் கடன்களின் வட்டி விகிதமும் குறையும்.
ரெப்போ ரேட்
ரிசர்வ் வங்கி நாட்டில் செயல்படும் வணிக வங்கிகளுக்கு அளிக்கும் குறைந்த காலகட்ட கடனுக்கான வட்டி விகிதமே ரெப்போ ரேட் எனக் கூறப்படுகிறது. இதனைப் பொறுத்து தான் மக்களுக்கு அளிக்கப்படும் கடன் விகிதங்கள் மாறுபடும்.
6.75 சதவீதம்
தற்போதைய நிலையில், ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் 6.75 சதவீதமாக உள்ளது. சந்தையின் கணிப்புகள் படி நாளை நடக்க உள்ள நாணய கொள்கை மறுஆய்வு கூட்டத்தில் ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் வரை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம்
பிப்ரவரி மாதம் நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் 5.18 சதவீதமாகக் குறைந்த நிலையில் ரெப்போ விகிதத்தைக் குறைப்பதற்கான வாய்ப்புகளும் தக்க சூழ்நிலைகளும் அமைந்துள்ளது.
ஊதிய கமிஷன்
மேலும் பருவநிலை உற்பத்தி காலம் மற்றும் மத்திய அரசின் 7வது ஊதிய கமிஷன் அமலாக்கம் ஆகியவை சந்தையின் வளர்ச்சி பாதைக்கு வித்திடுவதால், இதனை ஊக்குவிக்க ஆர்பிஐ தனது வட்டி விகித்தை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
0.75 சதவீதம் குறைப்பு
2015-16ஆம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைச் சுமார் 0.75 சதவீத வரை குறைத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications