ரூ.4,000 கோடி வேண்டாம்.. ரூ.9,000 கோடிதான் வேண்டும்.. மல்லையாவிற்குச் செக் வைக்கும் வங்கிகள்..!

டெல்லி: முடங்கிப்போன் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் பெயரில் வாங்கிய 9,000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையாவின் புதிய கடன் பரிந்துரையை 17 வங்கிகள் கூட்டமைப்பு உதறித் தள்ளியது.

அப்படி என்ன பரிந்துரை..? வாங்க பார்ப்போம்..!

ரூ.4,000 கோடி கடன் பரிந்துரை

ரூ.4,000 கோடி கடன் பரிந்துரை

நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையா, தன் பெயரில் உள்ள 9,000 கோடி ரூபாய் கடனில் ரூ.4,000 கோடிக்கான கடன் திரும்பச் செலுத்தும் பரிந்துரையைக் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதை மல்லையாவிற்குக் கடன் அளித்த 17 வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் தலைமையிலான குழுவின் ஆலோசனைக்கு வந்ததுள்ளது.

 

உதறித் தள்ளிய வங்கிகள்

உதறித் தள்ளிய வங்கிகள்

இப்பரிந்துரையை ஆய்வு செய்த 17 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கூட்டமைப்பு, விஜய் மல்லையா கொடுத்துள்ள ரூ.4,000 கோடி கடன் பரிந்துரை தங்களை ஈர்க்கவில்லை என்றும், மீதமுள்ள 5,000 கோடி கடனை நாங்கள் திரும்பப்பெறுவோம் என்ற நம்பிக்கையை அவர் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

பரிந்துரையில் என்ன இருந்தது...?

பரிந்துரையில் என்ன இருந்தது...?

17 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கூட்டமைப்பில் இருக்கும் முக்கிய அதிகாரிகள் அளித்த தகவல்கள் படி, விஜய் மல்லையா அளித்துள்ள ரூ.4,000 கோடி கடன் பரிந்துரையில் வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் 2,000 கோடி ரூபாயும், மீதமுள்ள 2,000 கோடி ரூபாயை பல்வேறு கட்டுப்பாடுகளின் கீழ் திருப்பி அளிக்கப்படுவதாக மல்லையா தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 7

ஏப்ரல் 7

இவ்வழக்கு விசாரணை வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறும் போது உச்ச நீதிமன்றத்தில் இப்பரிந்துரை குறித்த முடிவுகளை 17 வங்கி கூட்டமைப்பு கருத்தைத் தெரிவிக்கும்.

வங்கிகள் உறுதி..

வங்கிகள் உறுதி..

இந்நிலையில் வங்கிகள் தரப்புக் கூறுகையில் விஜய் மல்லையாகக் குறைந்தது 4,900 கோடி ரூபாயை முழுமையாகச் சிங்கிள் பேன்மென்டாக அளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது.

மேலும் மீதமுள்ள தொகை மற்றும் வட்டித் தொகையைத் தவணை முறையில் பெற தயாராக உள்ளது எனப் பெயர் வெளியிட விரும்பாத வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

சந்தேகங்கள்

சந்தேகங்கள்

மேலும் வங்கி நிறுவனங்கள் மத்தியில் தற்போது புதிய சந்தேகங்கள் எழுந்துள்ளது. முடங்கிப்போன கிங்பிஷர் ஏர்லையன்ஸ் மற்றும் சரிந்து வரும் மல்லையாவின் சாம்ராஜ்யம் தற்போது இருக்கும் சூழ்நிலையில், அவர் கடன் பெறுவதற்காக அளித்துள்ள சொத்துக்கள் தற்போது சந்தையில் விலைப்போகுமாக எனக் கேள்வி எழுந்துள்ளது.

வாய்ப்புகள்

வாய்ப்புகள்

இந்நிலையில் வங்கித்துறையின் மூத்த அதிகாரிகள் சிலர் கூறுகையில், கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனம் யுபி குழுமத்தின் கீழ் உள்ள நிலையில், இந்நிறுவனம் பங்குகளுக்கு யுபி குழுமம் உத்தரவாதம் அளிக்கும் வகையில் இருந்தால், வங்கிகள் கூட்டமைப்பு கிங்பிஷ்ர் ஏர்லையன்ஸ் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் சுமார் 2,000 கோடி ரூபாய் பணத்தைத் திரட்ட முடியும் என அவர் தெரிவித்தார்.

20 வழக்குகள்

20 வழக்குகள்

கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்கு எதிராகவும், கடனைத் திரும்பி பெறுவதற்காகவும் நாட்டின் பல பகுதிகளில் சுமார் 20 வழக்குகளை இந்த 17 வங்கிகள் கூட்டமைப்பு சந்தித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+