சோலார் மின் உற்பத்தியில் சிறந்து விளங்கும் சன்எடிசன் நிறுவனம் தற்போது மிகப்பெரிய நிதிநெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்திற்குச் சொந்தமாக இந்தியாவில் இருக்கும் சில சோலார் மின் உற்பத்தி தளங்களை அதானி குழுமம் வாங்கத் திட்டமிட்டுள்ளது.
தனது நிறுவன திட்டங்களைச் செயல்படுத்தவும், நிறுவனத்தை மீட்டு எடுக்கவும் போராடி வரும் இந்த அமெரிக்கச் சன்எடிசன் நிறுவனத்திற்கு அதானி குழுமத்தின் முடிவு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.
திவாலாகும் சன்எடிசன்
சமீப காலமாக உலகளவில் சோலார் மின் உற்பத்தியில் இறங்கப் பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் வகையில் சன்எடிசன் சந்தையில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது.
ஆனால் சில நிர்வாக மற்றும் உற்பத்தி பிரச்சனைகளால் இந்நிறுவனத்தின் வர்த்தகம் அதிகளவில் பாதித்துள்ளது.
இந்திய சந்தை
இந்திய சந்தையில் சன்எடிசன் நிறுவனத்திற்குச் சொந்தமான சில சொத்துக்களில் குறிப்பிடத்தக்க அளவிலான உற்பத்தியை எட்ட முடியாத நிலையில், அவற்றை விற்பனை செய்யச் சன்எடிசன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
வாய்ப்புகள்
இந்தியாவில் சோலார் மின் உற்பத்திக்கு மத்திய அரசிடம் பல சலுகைகள் கிடைத்தாலும் இந்நிறுவனத்திற்கு அமெரிக்கச் சந்தையில் இருக்கும் 12 பில்லியன் டாலர் கடன் சன்எடிசன் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக அமைந்துள்ளது.
அதானி
இந்நிலையில் இந்திய சந்தையில் இருக்கும் சில சொத்துக்களைச் சன்எடிசன் நிறுவனம் விற்பனை செய்ய முன்வந்துள்ளது.
இதனை மிகப்பெரிய வாய்ப்பாகக் கருதி அதானி குழுமம் இச்சொத்துக்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள்
இந்திய சந்தையில் சன்எடிசன் போன்று ஃபஸ்ட் சோலார் இன்க் மற்றும் சீனாவின் டிரினா சோலார் லிமிடெட் ஆகிய பன்னாட்டு நிறுவனம் இயங்கி வருகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications