மும்பை: 2016-17ஆம் நிதியாண்டின் முதல் இருமாத நாணய கொள்கை மறுஆய்வு கூட்டத்தை இன்று மும்பையில் ரிசர்வ் வங்கி நடத்தியது. நாட்டில் நிலவும் குறைந்த அளவிலான பணவீக்கம், வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் மத்திய அரசின் 7வது ஊதிய கமிஷன் அமலாக்கம் ஆகியவை நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
இதனை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் இன்று வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பினால் சமாணியர்களுக்கு அதிகளவில் பயன்படும் வீட்டுக்கடன், வாகனக் கடன், விவசாயக் கடன் என அனைத்து விதமான கடன்களின் வட்டி விகிதம் குறையும். இதனால் மக்கள் வணிக வங்கிகளுக்குச் செலுத்தப்படும் வட்டிப் பணத்தில் மிகப்பெரிய அளவிலான லாபத்தைப் பார்க்க முடியும். ஏற்கனவே மத்திய அரசு சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ள சூழ்நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தை அதிகளவில் பாதிக்கும். இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் இன்றை அறிவிப்புக்குப் பின் வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6.50 சதவீதமாக அறிவித்துள்ளது. மேலும் வங்கி வைப்புகளின் சிஆர்ஆர் விகிதத்தை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 4 சதவீதமாக அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. இன்றைய வர்த்தகத்தில் ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளால் வங்கித்துறை பங்குகள் 0.80 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்துள்ளது.
மகிழ்ச்சியில் மக்கள்
சேமிப்புத் திட்டங்கள்
ரெப்போ விகிதம்
சிஆர்ஆர்
வங்கிப் பங்குகள்
(Loans To Get Cheaper As RBI Cuts Interest Rates)


Click it and Unblock the Notifications