கொல்கத்தா: நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், தனது சேவையை விரிவாக்கும் விதத்தில் ஏர்செல் நிறுவனத்தின் 4ஜி அலைக்கற்றைகளை வாங்கத் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின் படி ஏர்டெல் எட்டு வட்டங்களில் உள்ள ஏர்செல் நிறுவனத்திற்குச் சொந்தமான 4ஜி அலைவரிசையை வாங்க பார்தி ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது, இதற்கு ஏர்செல் நிறுவனமும் நிர்வாகமட்டம் வரை ஒப்புதல் அளித்துள்ளது. இன்றைய மதிப்பீட்டில் இதன் மொத்த மதிப்பு 3,500 கோடி ரூபாய்.
இந்த 4ஜி அலைக்கற்றையைக் கைப்பற்றுவதற்கான ஒப்பந்தத்தில் ஏர்டெல் மற்றும் ஏர்செல் நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பேன் இந்தியா
ஏர்டெல் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தின் 4ஜி அலைவரிசையை வாங்கும் பட்சத்தில் இந்தியா முழுக்க 4ஜி அலைவரிசையை வைத்திருக்கும் நிறுவனமாக ஏர்டெல் உருவெடுக்கும்.
4ஜி சேவை
ஏற்கனவே ஏர்டெல் இந்திய முழுக்கத் தனது சேவையை அளித்து வந்தாலும் 4ஜி மற்றும் இதர முக்கியச் சேவைகளின் தென் இந்திய பகுதியில் ஏர்செல் ஆதிக்கம் அதிகம். இந்நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் 4ஜி அலைக்கற்றை வாங்கிய பின் ஏர்டெல் நிறுவனம் குமரி முனை முதல் கஷ்மீர் எல்லை வரை ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் 4ஜி சேவையை வழங்க உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
இந்தக் கைப்பற்றுதல் அனைத்தும் ரிலையன்ஸ் ஜியோ-வின் அறிமுகத்திற்கு எதிராகவும், சந்தையில் நிலைத்திருக்கவே ஏர்டெல் இத்தகைய பெரும் தொகையைக் கொடுத்து 4ஜி அலைக்கற்றை வாங்குகிறது.
8 வட்டங்கள்
தமிழ்நாடு (சென்னையும் சேர்த்து), பிஹார், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஆந்திரப் பிரதேசம், ஒடிஷா மற்றும் வட கிழக்கு ஆகிய மாநிலங்களுக்கான அலைவரிசைக்கு ஒப்பந் தம் போடப்பட்டுள்ளது. ஏர்செல் நிறுவனத்தின் இந்த அலைவரிசை 2030-ம் ஆண்டுச் செப்டம்பர் வரை செல்லுபடியாகும்.
வீடியோகான்
பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த மாதம் வீடியோகான் நிறுவனத்தின் 6 வட்டாரங்களுக்கான 4ஜி அலைவரிசையை 4,428 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications