டெல்லி: உலகின் மிகப்பெரிய மொபைல் விற்பனை நிறுவனமாகத் திகழும் ஆப்பிள், இந்திய சந்தையில் அதிகளவிலான மொபைல்களை விற்பனை செய்ய முடியாத காரணத்தால் தனது புதிய ஐபோன்களை வாடகைக்கு விடத் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனமான ஆப்பிள், இந்தியர்கள் மத்தியில் ஐபோன் புழக்கத்தை அதிகரிக்க, கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களை மையமாகக் கொண்டு வாடகை ஐபோன் திட்டத்தை வடிவமைத்துள்ளது.
ஐபோன் எஸ்ஈ
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகமான ஐபோன் எஸ்ஈ மாடல் போனை 2 வருட ஒப்பந்த திட்ட அடிப்படையின் கீழ் மாதம் 999 ரூபாய் வாடகைக்கு வாடகைக்கு அளிக்க உள்ளது.
ஐபோன் 6 மற்றும் 6எஸ்
இந்நிறுவனத்தின் அதிக விலைகொண்ட மொபைல் போனாகக் கருதப்படும் ஐபோன் 6 மற்றும் 6எஸ் 2 வருட ஒப்பந்த திட்ட அடிப்படையின் கீழ் மாதம் 1,199 மற்றும் 1,399 ரூபாய்க்கு ஐபோன்களை வாடகைக்கு அளிக்க உள்ளது.
பயன்பாடு..
அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் ஆடம்பர சந்தை வளர்ச்சி மிகவும் குறைவு. இந்நிலையில், மக்கள் மத்தியில் ஆப்பிள் நிறுவன பொருட்களின் பயன் பாட்டை அதிகரிக்க இந்நிறுவனம் இத்தகைய திட்டங்களை அறிவித்துள்ளது.
விளம்பரம்
இப்புதிய வாடகை திட்டங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் விதமாக ஆப்பிள் நிறுவனம் இன்று செய்தித்தாள்களில் விளம்பரம் செய்திருந்தது.
மாற்றக்கூடிய வசதி உண்டு..
இந்த 2 வருட காலத்தில் ஒரு தங்களது விருப்பத்தின் படி எந்த ஐபோன் 6, 6எஸ் மற்றும் ஐபோன் எஸ்ஈ மாடல் போன்களில் எதை வேண்டும் என்றாலும் மாற்றிக்கொள்ளலாம்.
மோசமான திட்டம்...
இன்றைய நிலையில் ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டில் ஐபோன் 6எஸ் போனின் (16ஜிபி, ரோஸ் கோல்டு) விலை 45,999 ரூபாய்.
2 வருட ஒப்பந்தத்தின் கீழ் மாதம் 1,399 ரூபாய் வாடகை என்றால்
ரூ.1,399 x 24= 33,576 ரூபாய். இதில் வாடிக்கையாளர்களுக்குச் சுமார் 12,000 ரூபாய் லாபம் கிடைத்தாலும், ஒப்பந்தம் காலம் முடிந்த பிறகு நாம் மொபைல் போனை திருப்பிச் செலுத்த வேண்டும். சந்தையில் 2 வருடப் பழமை ஐபோனுக்குக் குறைந்தது 15,000 ரூபாய் கிடைக்கும் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.
அமெரிக்ககாரன்..
இந்திய கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களை முட்டாள்கள் எனக் கணக்குப் போட்டான் போல ஆப்பிள். நாங்க எல்லாம் யாரு.. போடா டேய்..!
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications