டெல்லி: சர்வதேச மென்பொருள் மற்றும் வன்பொருள் சந்தையில் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் ஐபிஎம், அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் புதிய கூட்டணியை அமைத்துள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு, கிளவுட் சேவை அளிப்பதற்காக ஐபிஎம் அனில் அம்பானி தலைமை வகிக்கும் இந்நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
ஐபிஎம் கிளவுட்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அதீத பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இன்பராஸ்டக்சர் (IaaS) சேவைகளைக் கொண்ட ஐபிஎம் கிளவுட் சேவையை நிறுவ இந்நிறுவனத்துடன் இணைந்துள்ளோம் என ஐபிஎம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
இந்நிறுவனத்தில் சுமார் 11.5 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது, 39,000 வாடிக்கையாளர்கள் மிகப்பெரிய, சிறிய மற்றும் நடுத்தரமான (SMB) நிறுவனங்களாகும்.
ஐபிஎம்
இப்புதிய கூட்டணியின் மூலம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது SMB வடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவை மற்றும் என்டர்பிரைஸ் சேவைகளை அளிக்கத் திட்டமிட்டுள்ளது.
அதுமட்டும் அல்லாமல் சந்தையில் இத்தகைய மேம்படுத்தப்பட்ட சேவையை அளிப்பதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களைப் பெறவும் RCOM திட்டமிட்டுள்ளது.
புதிய சேவைகள்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அளித்த தகவல்கள் படி தனது வாடிக்கையாளர்களுக்குக் கிளவுட் சேவை மட்டும் அல்லாமல் end-to-end ஈகாமர்ஸ் சேவையும் அளிக்கத் திட்டமிட்டுள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
ஐபிஎம் நிறுவனத்திற்கு டெலிகாம் துறையில் ஏற்கனவே மிகப்பெரிய வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இதில் பெல் கனடா, இன்டோஸ்டாட், டெல்ஸ்ட்ரா, ரிலையன்ஸ், ஏடி அன்ட் டி, வெரிசோன் எனப் பல நிறுவனங்களுக்குப் பலதரப்பட்ட சேவைகளை அளித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
மல்லையாவின் புலம்பல்..!
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications