6 மாத சரிவில் சில்லறை பணவீக்கம்..!

டெல்லி: இந்திய சந்தையில் கடந்த சில மாதங்களாக நிலைபெற்று வரும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு, சில்லறை பணவீக்கத்தை 6 மாத சரிவிற்குக் கொண்டு சென்றது.

மத்திய அரசின் சிறப்பான வளர்ச்சி திட்டங்கள் அறிவிப்புகள், பன்னாட்டு நிறுவனங்களின் நிதியுதவி, ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவித்த ரெப்போ விகித குறைப்பு ஆகியவை சில்லறை பணவீக்கத்தை அதிகளவில் குறைத்துள்ளது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

ஆர்பிஐ தலைவர் ரகுராம் ராஜன் கடந்த வாரம் நாட்டின் சில்லறை பணவீக்கத்தின் நிலையை வைத்து வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடன் விகிதத்தை 0.25 சதவீதம் வரை குறைத்தார்.

இந்நிலையில் மார்ச் மாதத்தின் சில்லறை பணவீக்கம் குறித்த அறிவிப்புகள் இன்று வெளியாகியுள்ளது.

 

சில்லறை பணவீக்கம்

சில்லறை பணவீக்கம்

மார்ச் மாத முடிவில் நாட்டின் பணவீக்கத்தின் அளவு யாரும் எதிர்பார்க்காத வகையில் 6 மாத சரிவை சந்தித்து 4.83 சதவீதமாகக் குறைந்துள்ளது என மத்திய புள்ளிவிவர அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து 5 சதவீதத்திற்கும் குறைவான நிலையில் இருந்தால் ரெப்போ விகித்தை மேலும் குறைக்க மிகப்பெரிய வாய்ப்பு உருவாகும் என ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

கணிப்புகள்

கணிப்புகள்

ரயூட்டர்ஸ் மற்றும் பிற முக்கிய வர்த்தக அமைப்புகள் நாட்டின் சில்லறை பணவீக்கம் 5 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துச் செவ்வாய்க்கிழமை 5.26 சதவீதமாக இருக்கும் எனக் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொழிற்துறை உற்பத்தி

தொழிற்துறை உற்பத்தி

இந்நிலையில் மார்ச் மாத சரிவிற்கு வித்திட்டது பிப்ரவரி மாத தொழிற்துறை உற்பத்தி தான். சந்தையில் அனைத்துத் தரப்பினரும் 1 சதவீதமாக மட்டுமே இருக்கும் எனக் கணித்த தொழிற்துறை உற்பத்தி 2 சதவீதம் வரை உயர்ந்தது.

2013..

2013..

2013ஆம் ஆண்டில் நாட்டில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, கடுமையான நாணயக் கொள்கை மற்றும் அதிகளவிலான நிதிப் பற்றாக்குறை ஆகியவை நாட்டின் சில்லறை பணவீக்கத்தை இரண்டு இலக்க எண் அளவிற்கு உயர்த்தியது.

நிதிப் பற்றாக்குறை

நிதிப் பற்றாக்குறை

நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாட்டின் நிதிப் பற்றாக்குறையை நடப்பு நிதியாண்டில் மொத்த உற்பத்தி அளவில் 3.5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என இலக்கை நிர்ணயம் செய்துள்ளார்.

ரிசர்வ் வங்கி இலக்கு

ரிசர்வ் வங்கி இலக்கு

மார்ச் 2018ஆம் ஆண்டுக்குள் நாட்டின் சில்லறை பணவீக்கத்தை 4 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி இலக்கை முடிவு செய்துள்ளது.

நாட்டின் வளர்ச்சி

நாட்டின் வளர்ச்சி

2015ஆம் நிதியாண்டில் செப்டம்பர் மாதம் முடிவடைந்த காலாண்டில் 7.7 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி டிசம்பர் மாத காலாண்டில் 7.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இந்திய சந்தையின் அடிப்படையில் நாட்டின் வளர்ச்சி 8 சதவீதத்திற்கும் குறைவாகப் பொருளாதார வளர்ச்சி பதிவாகினால் இந்தியாவில் வேலைவாய்ப்புக் குறைந்துள்ளதாகப் பொருள்.

 

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

தற்போதைய நிலையில் இந்தியா 8 சதவீதம் என்ற வளர்ச்சி இலக்கை அடைய நாட்டில் சுமார் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்க வேண்டும்.

உணவு பணவீக்கம்

உணவு பணவீக்கம்

மார்ச் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 5.30 சதவீதத்தில் இருந்து 5.21 சதவீதமாகக் குறைந்துள்ளது.

7வது சம்பள கமிஷன்

7வது சம்பள கமிஷன்

மேலும் மத்திய அரசு அறிவிக்க உள்ள 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்விற்கான 7வது சம்பள கமிஷன் மூலம் நாட்டின் சில்லறை பணவீக்கம் 1-1.5 சதவீதம் வரை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+