தொடர்ந்து வெளியேறும் உயர் அதிகாரிகள்.. சோகத்தில் 'பிளிப்கார்ட்'..!

பெங்களூரு: நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தனது வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யவும், அதன் தொழில்நுட்ப திறனை மேம்படுத்திக்கொள்ளவும் திட்டமிட்டு கூகுள் நிறுவன ஊழியரான புனித் சோனி-யை மிகப்பெரிய சம்பளத்தில் பணியில் அமர்த்தியது.

தற்போது 15 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் புனித் சோனி நிறுவனத்தை விட்டு விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

இந்தியாவில் மிகப்பெரிய சந்தை வர்த்தகத்தை அடையத் திட்டமிட்ட பிளிப்கார்ட் தனது மொபைல் ஆப் மற்றும் இணையதளத்தின் திறனை மேம்படுத்திக்கொள்ள வருடம் 1 மில்லியன் டாலர் சம்பளத்தில் பிளிப்கார்ட் இவரைப் பணியில் அமர்த்தியது.

போட்டி..

போட்டி..

இதனால் ஈகாமர்ஸ் சந்தையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனங்களான சோமேட்டோ, ஸ்னாப்டீல், போன்ற முன்னணி நிறுவனங்கள் உலகின் முன்னணி நிறுவனங்களில் இருந்து முக்கியப் பணியாளர்களை மிகப்பெரிய சம்பளத்தில் இந்திய நிறுவனங்கள் பணியில் அமர்த்தியது.

13 மாதங்கள்

13 மாதங்கள்

சரியாக 13 மாதங்கள் மட்டுமே பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றிய புனித் சோனி சில அடிப்படை வேலைகளை மட்டும் செய்துவிட்டு திடீரென நிறுவனத்தை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிங் சேவை

பிங் சேவை

பிளிப்கார்ட் நிறுவனத்தின் மொபைல் ஆப்-இல் மெசேஜிங் சேவை மட்டுமே இந்த 15 மாத காலத்தில் புனித் சோனி அறிமுகப்படுத்தினார். ஆனால் சந்தையில் இது மிகப்பெரிய வெற்றி காண தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.

நிலையற்ற சந்தை

நிலையற்ற சந்தை

புனித் சோனி-யின் வெளியேற்றத்திற்கு முக்கியக் காரணம் இந்திய சந்தையில் ஈகாமர்ஸ் சந்தை சந்தித்து வரும் நிலையற்ற முதலீடும், வர்த்தகமும் தான்.

எல்லாம் சரியாக இருக்கிறது என்ற மாய உலகில் இருந்த ஈகாமர்ஸ் துறைக்குக் கடந்த சில மாதங்கள் வரை 8 திசைகளில் இருந்தும் முதலீடு குவிந்தது. ஆனால் மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் பிளிப்கார்ட் பங்கு மதிப்பீடு குறைத்தது. இதன் எதிரொலியாக இத்துறையின் மீதான முதலீடு முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

மற்றொரு உயர் அதிகாரி

மற்றொரு உயர் அதிகாரி

புனித் சோனி நியமனத்திற்குப் பின் இவரால் பிளிப்கார்ட் நிறுவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட நிகித் தேசாய், இந்நிறுவனத்தின் chief of staff என்ற மிகப்பெரிய பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

தற்போது புனித் சோனி உடன் நிகித் தேசாய் அவர்களும் வெளியேறுவதாகப் பிளிப்கார்ட் உறுதி செய்துள்ளது.

 

அமேசான்

அமேசான்

கடந்த ஒரு வருட காலத்தில் பிளிப்கார்ட் நிறுவனம் புனித் சோனி மற்றும் நிகித் தேசாய் மட்டும் அல்லாமல் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த டேன் ராசன் கஸ்டமர் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூகிள்

கூகிள்

அதேபோல் கூகிள் நிறுவனத்தில் பணியாற்றி ரவி பயகோட் பிளிப்கார்ட் நிறுவனத்தின் என்ஜினியரிங் மற்றும் அக்கவுன்டிங் பிரிவின் தலைவரா நியமிக்கப்பட்டுள்ளார்.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

பிளிப்கார்ட் நிறுவனத்தின் டிஜிட்டல் சரக்கு மற்றும் சேவை பிரிவின் திட்ட மேலாளராக ஆனந்த லக்ஷமி நாராயணன் அவர்களை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஹைதராபாத்தில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றியவர்.

தள்ளுபடியும்.. ஈகாமர்ஸ் துறையும்..

தள்ளுபடியும்.. ஈகாமர்ஸ் துறையும்..

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+