பெங்களூரு: 2016ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் விஷால் சிக்கா தலைமையில் 4வது முறையாகக் கணிப்புகளைத் தாண்டி 3,597 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் சந்தையின் கணிப்புகளையும் தாண்டி உடைத்தெறிந்து 3.81 சதவீத உயர்வில் 3,597 கோடி ரூபாய் லாபத்தை எட்டிய கலக்கியுள்ளது.
லாபத்தில் இன்போசிஸ்..
டிசம்பர் மாதம் முடிவடைந்த காலாண்டில் இன்போசிஸ் வெறும் 3,097 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெற்றுள்ள நிலையில், ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாத காலங்களில் இதன் அளவு 3.81 சதவீதம் உயர்ந்து 3,465 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய லாப அளவை எட்டியுள்ளது.
மொத்த லாப அளவுகளைப் பார்க்கும் போதும் கடந்த காலாண்டை விட 6.59 சதவீதம் உயர்ந்து 4,220 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த வருடத்தை விடவும் 22.35 சதவீதம் அதிகமாகும்.
வருவாய் அளவுகள்
இதேபோல் இந்நிறுவனத்தின் வருவாய் அளவுகளும் யாரும் எதிர்பார்க்காத வகையில் சந்தை கணிப்புகளையும் தாண்டி 4.07 சதவீதம் அளவில் உயர்ந்து 16,550 கோடி ரூபாயாக உயர்ந்தது.
கடந்த வருடத்தின் இதேகாலக்கட்டத்தை ஒப்பிடும்போது வருவாய் அளவு 23.40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
பங்கு ஆதாயங்கள்
2016ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டு முடிவுகள் வெளியான நிலையில் இந்நிறுவன பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 15.74 ரூபாய் என்ற அளவில் பங்க ஆதாயமாக அளித்துள்ளது. கடந்த காலாண்டில் இதன் அளவு 13.55 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டாலர் வருவாய்
2017ஆம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் டாலர் வருவாய் 11.5 சதவீதத்தில் இருந்து 13.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சந்தை நிலவரம்
2016ஆம் நிதியாண்டில் பிரிட்டிஷ் பவுன்ட் மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பின் திடீர் மாறுபாடு, இந்திய ஐடி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள சில முக்கியப் பிரச்சனை மற்றும் வர்த்தகப் பாதிப்புகளால் இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளில் கணிசமான பாதிப்பு இருக்கும் எனச் சந்தை வல்லுநர்கள் கணித்தனர்.
ஆனால் கணிப்புகளையும் தாண்டில் சிறப்பான வளர்ச்சியை இன்போசிஸ் அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications