வழக்கத்தை விடக் குறைவான 'ஊதிய உயர்வு'.. குழப்பத்தில் மூழ்கிய 'இன்போசிஸ்' ஊழியர்கள்..!

பெங்களூரு: டிசிஎஸ் நிறுவனம் அமெரிக்காவில் திருட்டு வழக்கில் சிக்கிக்கொண்டுள்ள நிலையில், சக போட்டி நிறுவனமான இன்போசிஸ், தனது ஊழியர்களுக்கு 6-12 சதவீதம் என்ற அளவில் ஊதிய உயர்வை அளித்தாக அறிவித்துள்ளது.

இந்த ஊதிய உயர்வில் இன்போசிஸ் நிறுவன ஊழியர்களுக்குப் பலதரப்பட்ட குழப்பங்கள் உள்ளதாகக் கருத்து நிலவி வருகிறது.

என்ன குழப்பம்..?

என்ன குழப்பம்..?

இன்போசிஸ் நிறுவனம் கடந்த 5 வருடமாக 6.5 சதவீதம் என்ற சராசரியான ஊதிய உயர்வை அளித்து வருகிறது.

ஆனால் தற்போது நிர்வாகம் 6-12 சதவீதம் அறிவித்துள்ளதால், ஊழியர்கள் மத்தியில், 6 சதவீதம் என்ற குறைவான ஊதிய உயர்வாகவும். 12 சதவீதம் என அதிகப்படியான ஊதிய உயர்வாகவும் இருக்கலாம் எனக் குழப்பம் நிலவி வருகிறது.

 

இதில் என்ன இருக்கிறது...?

இதில் என்ன இருக்கிறது...?

நடப்பு நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் அளவு 7 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ள நிலையில் 6 சதவீதம் என்ற ஊதிய உயர்வு மிகவும் குறைவு என்பதே ஊழியர்களின் கவலை.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

அதுமட்டும் அல்லாமல் இன்போசிஸ் நிறுவனம் தற்போது 6-12 சதவீதம் என்று அறிவித்துள்ள நிலையில், 160 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐடி துறையில் பிற நிறுவனங்களும் 6 சதவீதம் என்ற குறைவான ஊதிய உயர்வை அளிக்கும் நிலை உருவாகும்.

இது இன்போசிஸ் நிறுவனத்தை மட்டும் அல்லாமல் சந்தையில் உள்ள பிற நிறுவனங்களும் அதிகளவில் பாதிக்கும்.

 

6-12% ஊதிய உயர்வு..

6-12% ஊதிய உயர்வு..

இன்போசிஸ் நிறுவனத்தின் அறிவிப்பின் படி தனது நிறுவனத்தில் நிர்வாக மட்ட ஊழியர்கள் முதல், ஆஃப்ஷோர் பணியாளர்களை வரை அனைவருக்கும் 6-12% என்ற ஊதிய உயர்வையே அளித்துள்ளது.

ஆன்சைட் ஊழியர்களுக்கு 1.5 முதல் 2 சதவீதம் வரையிலான ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு..

பதவி உயர்வு..

கடந்த வருடம் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து அதிகளவில் ஊழியர்கள் வெளியேறி வந்தனர், அதனைத் தடுக்கும் விதமாகச் சுமார் 23,000 ஊழியர்களுக்கு அதிரடியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஊழியர்கள் வெளியேற்றத்தைத் தடுக்கப்பட்டது.

ஆனால் இந்நிலையைச் சரி செய்யப்பட்ட நிலையில் நடப்பு நிதியாண்டில் வெறும் 8,900 ஊழியர்களுக்கு மட்டுமே ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

 

வேரியபில் பே..

வேரியபில் பே..

அதுமட்டும் அல்லாமல் எப்போது இல்லாத வகையில், நடப்பு நிதியாண்டில் ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய வேரியபில் பே அளவில் 90 சதவீதம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிரிஷ் ஷங்கர்

கிரிஷ் ஷங்கர்

இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் மனிதவள பிரிவு தலைவரான கிரிஷ் ஷங்கர் கூறுகையில், 2015-16ஆம் நிதியாண்டில் நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களுக்குச் சராசரி ஊழியர்களை விடவும் அதிகமாக ஊதிய ஊயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டும் அல்லாமல் 20-25% மேனேஜர்களுக்குப் போனஸாக நிறுவனப் பங்குகள் அளிக்கப்பட்டுள்ளது.

 

விஷால் சிக்கா மேஜிக்..

விஷால் சிக்கா மேஜிக்..

திருட்டு வழக்கில் டிசிஎஸ்

திருட்டு வழக்கில் டிசிஎஸ்

நாராயணா..!

நாராயணா..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+