இன்போசிஸ் நிறுவனத்தை ஓரம்கட்டும் 'டிசிஎஸ்'.. 3 மாதத்தில் ரூ.6,300 கோடி லாபம்..!

பெங்களூரு: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ், அமெரிக்காவில் எபிக் நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் இந்நிறுவனத்திற்குச் சுமார் 1 பில்லியன் டாலர் அபராதம் விதித்தது.

இதனால் பங்குச்சந்தையில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 3 சதவீகம் வரை சரிந்து முதலீட்டாளர்களைப் பதம் பார்த்தது.

இத்தகைய சூழ்நிலையில் சக நிறுவனங்களின் கடுமையான போட்டிக்கு மத்தியில் டிசிஎஸ் நிறுவனம் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் சுமார் 64.4 சதவீதம் அளவிலான லாப உயர்வைச் சந்தித்துள்ளது.

6,341 கோடி ரூபாய் லாபம்

6,341 கோடி ரூபாய் லாபம்

தொடர்ந்து 6 காலாண்டுகளாக மந்தமான லாப நிலையை டிசிஎஸ் நிறுவனம் 2015-16ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் சுமார் 64.4 சதவீத லாப உயர்வைச் சந்தித்துள்ளது.

கடந்த வருடம் இதே காலாண்டில் 3,858 கோடி ரூபாயாக இருந்த லாப அளவு தற்போது 6,341 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

 

டிஜிட்டல் வர்த்தகம்

டிஜிட்டல் வர்த்தகம்

இந்நிறுவனத்தின் ஹெல்த்கேர் வர்த்தகம் அமெரிக்காவில் தொடக்கப்பட்ட திருட்டு வழக்கால் சரிவை காணும் சூழ்நிலை இருந்தாலும், 4வது காலாண்டில் டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் பிற துறைகளில் நிலையான வர்த்தகம் ஆகியவை டிசிஎஸ் நிறுவனத்தின் லாப அளவை அதிகரித்துள்ளது.

மொத்த வருவாய்

மொத்த வருவாய்

கடந்த வருடம் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த வர்த்தகம் 24,219 கோடியாக இருந்த நிலையில், தற்போது இதன் அளவு 17.5 சதவீதம் உயர்ந்து 28,449 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

டிஜிட்டல் வர்த்தக வருவாய்

டிஜிட்டல் வர்த்தக வருவாய்

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்தில் டிசிஎஸ் நிர்வாகம் தனது டிஜிட்டல் வர்த்தகப் பிரிவில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்தது. இதனால் இப்பிரிவின் வருவாய் அளவு மட்டும் 2.3 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளது.

பிரிவும்.. வளர்ச்சியும்..

பிரிவும்.. வளர்ச்சியும்..

இந்நிலையில் 2015-16ஆம் நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் BFSI பிரிவு 3.2 சதவீத உயர்வு, உற்பத்துத் துறை 3.9 சதவீத உயர்வு, ரீடைல் வர்த்தகம் 2.1 சதவீத உயர்வை அடைந்துள்ளது.

இன்போசிஸ்

இன்போசிஸ்

2016ஆம் நிதியாண்டின் மார்ச் மாத காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் வெறும் 3,597 கோடி ரூபாய் லாபத்தை அடைந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனம் 6,341 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய அளவை அடைந்துள்ளது.

பணியாளர்கள் எண்ணிக்கை

பணியாளர்கள் எண்ணிக்கை

ஜனவரி - மார்ச் மாத காலகட்டத்தில் டிசிஎஸ் நிறுவனத்தில் 22,576 புதிய ஊழியர்கள் இணைந்தது மூலம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3,54,000 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் இந்நிறுவனத்தில் 90,182 ஊழியர்கள் இணைந்துள்ளனர்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+