டெல்லி: சர்வதேச சந்தையில் ஆடம்பர கார்களுக்குத் தனி இடத்தைப் பெற்ற பென்ட்லி நிறுவனம், இந்தியாவில் முதல் முறையாகத் தனது புதிய எஸ்யூவி மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய ஆடம்பர சந்தை மிகவும் குறைவான வளர்ச்சியை மட்டுமே சந்தித்து வந்த நிலையில், கடந்த சில வருடங்களாக ஆடம்பர பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.
3.85 கோடி ரூபாய்
இந்தியாவில் தற்போது வளர்ந்து வரும் ஆடம்பர சந்தையை மையமாகக் கொண்டு பென்ட்லி நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாகத் தனது புதிய எஸ்யூவி மாடல் காரான Bentayga-வை 3.85 கோடி ரூபாய் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
பெங்களூரு, சென்னையில்..
இதன் அறிமுக விழா மும்பையில் நடந்தது குறிப்பிடத்தக்கது. Bentayga-வின் 3.85 கோடி ரூபாய் விலை டெல்லி ஷோரூம்களில் மட்டுமே. சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் இதன் விலை 4 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
301 Kmph வேகம்
இப்புதிய Bentayga காரின் அதிகப்படியான வேகம் 301 Kmph ஆகும், 0-60 கிலோமீட்டர் வேகத்தை 4 நொடிகளில் எட்டி விடும் சக்திவாய்ந்த என்ஜின் கொண்டுள்ளது.
டீலர்
உலக நாடுகளில் பென்ட்லி நிறுவன தயாரிப்புகளை விற்பனை செய்யும் தனது ஆஸ்தான டீலரான Exclusive Motors இந்தியாவிலும் விற்பனை செய்ய உள்ளது.
2 வாரத்தில் டெலிவரி
இந்நிலையில் Exclusive Motors, கூறுகையில், ஏற்கனவே நாங்கள் பெற்ற ஆர்டர்களுக்கு அடுத்த 2 வாரத்தில் டெலிவரி செய்யத் திட்டமிட்டுள்ளோம். புதிய ஆர்டர்களுக்கு டெலிவரி செய்ய 5-6மாதங்கள் ஆகும் எனத் தெரிவித்துள்ளது.
லிமிடெட் வெர்ஷன்
இப்புதிய Bentayga கார் லிமிடெட் வெர்ஷன் கார்களாகும். இதனால் சந்தையில் இக்கருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை இந்தியாவில் 3 இலக்குகளுக்கு ஆர்டர்கள் பெற்றுள்ளோம். இந்நிலையில் இந்தக் காரை அதிகப்படியாக 3,000 கார்களை மட்டுமே தயாரிக்கப் பென்ட்லி முடிவு செய்துள்ளது.
பென்ட்லி Bentayga
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications