மும்பை: ஆடம்பர சந்தையில் இருக்கும் ஐபோன்களை இந்தியாவில் விற்பனை செய்யப் போராடி வந்த ஆப்பிள் நிறுவனம். 2016ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் விற்பனையில் 56 சதவீத உயர்வை எட்டியுள்ளது.
ஆனால் சர்வதேச சந்தையில் 13 வருட ஐபோன் விற்பனையில் முதல் முறையாக விற்பனை சரிவும், வருவாய் இழப்பையும் ஆப்பிள் நிறுவனம் சந்தித்துள்ளது.
இந்திய சந்தை
இந்தியாவில் ஐபோன் விற்பனையை அதிகரிக்கப் பல வகையான சலுகைகள், பல கோடி ரூபாயில் விளம்பரம் என ஆப்பிள் நிறுவனம் அசத்தியது.
இதனால் இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஐபோன் விற்பனை 56 சதவீத உயர்வைச் சந்தித்துள்ளது. இதனால் இந்திய சந்தையின் மீது ஆப்பிள் சீஇஓ டிம் குக் மிகப்பெரிய நம்பிக்கை வளர்ந்துள்ளது.
சரிவு..
கடந்த 13 வருடத்தில் ஐபோன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாகச் சரிவை சந்தித்துள்ளது.
இந்தியாவில் விற்பனையும் வருவாயும் பாதிக்கும் அதிகமாக உயர்ந்தாலும், சர்வதேச அளவில் இதன் விற்பனை அதிகளவில் குறைந்து வருவாய் அளவு பாதித்துள்ளது.
ஆப்பிள் பங்குகள்
இதனால் அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 8 சதவீதம் சரிந்து பிப்ரவரி மாதத்திற்குப் பின் முதல் முறையாக 100 டாலருக்கும் குறைவான அளவைப் பதிவு செய்துள்ளது.
5 கோடி மொபைல்கள்
கடந்த நிதியாண்டில் 6 கோடிக்கும் அதிகமாக மொபைல் போன்களை விற்ற ஆப்பிள் நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் வெறும் 5 கோடி போன்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications