டெல்லி: விப்ரோ நிறுவனம் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை மிகப்பெரிய அளவில் ஏமாற்றிய நிலையில், எச்சிஎல் நிறுவனத்தின் லாபகரமான காலாண்டு முடிவுகள் ஐடி நிறுவனப் பங்குகள் மீதான முதலீட்டு நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் நாட்டின் முன்னணி மென்பொருள் மற்றும் வன்பொருள் தயாரிப்பு நிறுவனமான எச்சிஎல் லாபத்தில் 14 சதவீத உயர்வைச் சந்தித்துள்ளது.
எச்சிஎல்
2016ஆம் ஆண்டின் மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்த காலாண்டின் எச்சிஎல் நிறுவனத்தின் லாப அளவு கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது சுமார் 14 சதவீத உயர்வை அடைந்துள்ளது.
லாபம்
மொத்த லாபத்தில் 14 சதவீத உயர்வை அடைந்த எச்சிஎல் 3 மாத காலகட்டத்தில் சுமார் 1,683 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று முதலீட்டாளர்கள் மகிழ்வித்துள்ளது.
வருவாய்
இந்நிலையில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவு 15 சதவீதம் அளவில் உயர்ந்து 10,698 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 9,267 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
100 மில்லியன் டாலர்
இக்காலகட்டத்தில் எச்சிஎல் நிறுவனம் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பில் சுமார் 8 ஆர்டர்களைக் கைப்பற்றியுள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
மார்ச்ச மாத முடிவில் இந்நிறுவனத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை 1,04,896. கடந்த வருத்தை விடவும் சுமார் 700 பேர் அதிகமாக இந்நிறுவனத்தில் இணைந்துள்ளனர்.
விப்ரோ
அசிம் பிரேம்ஜி தலைமை வகிக்கும் விப்ரோ நிறுவனம் கடந்த வருடத்தை விடவும் 1.6 சதவீதம் குறைவான லாபத்தைப் பெற்று முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளது.
மோசமான லார நிலைகள்..
மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் விப்ரோ நிறுவனம் வெறும் 2,235 கோடி ரூபாய் லாபத்தை மட்டுமே பெற்றுள்ளது.
டிசிஎஸ்
தொடர்ந்து 6 காலாண்டுகளாக மந்தமான லாப நிலையை டிசிஎஸ் நிறுவனம் 2015-16ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் சுமார் 64.4 சதவீத லாப உயர்வைச் சந்தித்துள்ளது.
கடந்த வருடம் இதே காலாண்டில் 3,858 கோடி ரூபாயாக இருந்த லாப அளவு தற்போது 6,341 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
டிஜிட்டல் வர்த்தகம்
இந்நிறுவனத்தின் ஹெல்த்கேர் வர்த்தகம் அமெரிக்காவில் தொடக்கப்பட்ட திருட்டு வழக்கால் சரிவை காணும் சூழ்நிலை இருந்தாலும், 4வது காலாண்டில் டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் பிற துறைகளில் நிலையான வர்த்தகம் ஆகியவை டிசிஎஸ் நிறுவனத்தின் லாப அளவை அதிகரித்துள்ளது.
லாபத்தில் இன்போசிஸ்..
டிசம்பர் மாதம் முடிவடைந்த காலாண்டில் இன்போசிஸ் வெறும் 3,097 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெற்றுள்ள நிலையில், ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாத காலங்களில் இதன் அளவு 3.81 சதவீதம் உயர்ந்து 3,465 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய லாப அளவை எட்டியுள்ளது.
மொத்த லாப அளவுகளைப் பார்க்கும் போதும் கடந்த காலாண்டை விட 6.59 சதவீதம் உயர்ந்து 4,220 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த வருடத்தை விடவும் 22.35 சதவீதம் அதிகமாகும்.
வருவாய் அளவுகள்
இதேபோல் இந்நிறுவனத்தின் வருவாய் அளவுகளும் யாரும் எதிர்பார்க்காத வகையில் சந்தை கணிப்புகளையும் தாண்டி 4.07 சதவீதம் அளவில் உயர்ந்து 16,550 கோடி ரூபாயாக உயர்ந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications