டெல்லி: நாட்டின் முன்னணி எப்எம்ஜிசி நிறுவனமான டாபர், சந்தையில் நிலவும் கடுமையான போட்டி மற்றும் தேவையைச் சமாளிக்கப் புதிய உற்பத்தி தளங்களை மற்றும் விரிவாக்கம் செய்ய 500 கோடி ரூபாய் அளவிலான மிகப்பெரிய முதலீட்டைச் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதில் புதிய உற்பத்தி தளங்களும் உண்டு..!
புதிய தொழிற்சாலை
டாபர் நிறுவனம் தனது பிர்சனல் மற்றும் ஹெல்த்கேர் பிரிவு பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க 250 கோடி ரூபாய் முதலீட்டில் அஸ்ஸாம் பகுதியில் புதிய உற்பத்தி தளத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டுக்குள் இப்புதிய தொழிற்சாலை முழுமையாக இயங்கும் என டாபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
500 கோடி ரூபாய் முதலீடு
டாபர் நிறுவனம் நடத்தி வரும் 20 உற்பத்தி தொழிற்சாலைகளில், இந்தியாவில் 12ம், மீதமுள்ளவை வெளிநாடுகளிலும் இயங்கி வருகிறது. அதில் சில எகிப்து, நேபால் மற்றும் அமெரிக்கா போன்ற பகுதிகளில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் நிறுவனத்தின் மொத்த உற்பத்தி அளவும் அதிகரிக்க, வெளிநாட்டில் உள்ள உற்பத்தி தளங்களிலும் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
பதஞ்சலி
இந்திய சந்தையில் பதஞ்சலி நிறுவனத்தின் அசுர வளர்ச்சியால் அனைத்து எப்எம்ஜிசி நிறுவனங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாதிப்புகளைக் குறைக்கவே டாபர் நிறுவனம் 500 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய முதலீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
5,000 கோடி ரூபாய் வர்த்தகம்
2015-16ஆம் நிதியாண்டில் பதஞ்சலி நிறுவனம் சுமார் 5,000 கோடி ரூபாய் வருவாய் அளவைப் பெற்றுள்ளது பாபா ராம்தேவ்-இன் பதஞ்சலி.
16.6 சதவீத லாப உயர்வு..
மார்ச் மாத காலாண்டில் டாபர் நிறுவனம் 16.6 சதவீத லாப உயர்வைச் சந்தித்துள்ளது. 2015-16ஆம் நிதியாண்டு காலத்தில் இதன் அளவு 17.5 சதவீத உயர்வை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2015-16ஆம் நிதியாண்டில் டாபர் நிறுவனத்தின் மொத்த விற்பனை 7,806.4 கோடி ரூபாயில் இருந்து 8,436 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications