இனி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓவர்டைம் சம்பளம் கிடையாது: 7வது சம்பள கமிஷன்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்பள கமிஷனின் ஊதிய உயர்விற்காகக் காத்துக்கொண்டு இருக்கும் இவ்வேளையில், சம்பள கமிஷன் ஆய்வுக் குழு அரசின் கூடுதல் செலவுகளைக் குறைக்கும் விதமாக வேலை நேரத்திற்குப் பின்னான கூடுதல் பணி நேரத்திற்கு (Overtime) சம்பளம் கிடையாது என அறிவித்துள்ளது.

ஓவர்டைம் சம்பளம் கட்..

ஓவர்டைம் சம்பளம் கட்..

7வது சம்பள கமிஷன் அறிக்கையின் அமலாக்கத்திற்கான இறுதிக்கட்ட பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையின் மத்திய அரசு ஊழியர்களின் செயல்திறன் அதிகரிக்கவும், குறைந்த நேரத்தில் பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என்பதை உணர்த்தி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த கூடுதல் பணி நேரத்திற்குச் சம்பளம், இனி அளிக்கப்படாது என ஹிந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

 

கொடுப்பனவு

கொடுப்பனவு

2012-13ஆம் ஆண்டு மத்திய அரசு, கூடுதல் பணி நேர கொடுப்பனவுக்கான (overtime allowance) நிதியளவை 797 கோடி ரூபாயில் இருந்து 1,629 கோடி ரூபாயாக உயர்த்தியது.

நிதி சேமிப்பு

நிதி சேமிப்பு

தற்போது கூடுதல் பணி நேர கொடுப்பனவை முழுமையாக நீக்கப்படுவதன் மூலம் மத்திய அரசுக்கு 1,629 கோடி ரூபாய் நிதி சேமிக்க முடியும் என 7வது சம்பள கமிஷன் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

இறுதி அறிக்கை

இறுதி அறிக்கை

இந்நிலையில் ஜூன் மாத இறுதிக்குள் 7வது சம்பள கமிஷனின் இறுதி மற்றும் முழுமையான அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனச் செயலாளர் அதிகார குழு தெரிவித்துள்ளார்.

அதிகப்படியான சம்பளம்

அதிகப்படியான சம்பளம்

செயலாளர் அதிகார குழு பரிந்துரையில் அதிகப்படியான சம்பளமாக 2,70,00 ரூபாயாகவும், குறைந்தபட்சமாக 21,000 ரூபாயாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. இது 7வது சம்பள கமிஷனில் குறிப்பிட்டதை விடவும் 20,000 மற்றும் 3,000 ரூபாய் தத்தம் அதிகமாகும்.

23.55 சதவீதம் உயர்வு

23.55 சதவீதம் உயர்வு

7வது சம்பள கமிஷன் அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான கொடுப்பனவு மற்றும் சம்பளம் சேர்ந்து மொத்தமாக 23.55 சதவீதம் உயர்வைப் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

<strong><em>7வது சம்பள கமிஷன்: தெரிந்ததும்.. தெரியாததும்..</em></strong>7வது சம்பள கமிஷன்: தெரிந்ததும்.. தெரியாததும்..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7th Pay Commission: Panel suggests abolition of over time for government employees

Central Government employees, anxiously waiting for salary increment proposed by the Seventh Pay Commission, there will be abolition of over time for the employees.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X