மும்பை: நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவன பட்டியலில் அறிமுகத் தினத்திலேயே நுழைய வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயல்படுகிறது ரிலையன்ஸ் ஜியோ. தனது வலையமைப்பை சோதிப்பதற்காகச் சோதனை அடிப்படையில் 4ஜி தொலைத்தொடர்பு சேவையை, இந்நிறுவனம், தனது ஊழியர்கள், டீலர்களைத் தாண்டி தற்போது பொதுமக்களும் துவங்கியுள்ளது.
ஆனால் இச்சேவை அழைப்பின்பெயரில் மட்டுமே பொதுமக்களுக்குக் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
தற்போது சோதனை அடிப்படையில் பொதுமக்களுக்காகத் துவங்கப்பட்ட தொலைத்தொடர்பு சேவைப் பெற வரும்பும் வாடிக்கையாளர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களிடமிருந்து அழைப்பு பெற வேண்டும் அப்போது தான் வாடிக்கையாளர் ரிலையன்ஸ் ஜியோ-வின் புதிய 4ஜி சேவையைப் பயன்படுத்த முடியும் எனப் பிடிஐ செய்தியாளர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. இந்தச் சேவையைப் பெறுவதற்கான மற்றொரு வழி, வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் டிஜிட்டல் கிளைகளில் விற்பனை செய்யப்படும் LYF ஸ்மாரட்போன் வாங்குவதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ-வின் புதிய 4ஜி சேவையைப் பயன்படுத்த முடியும். இந்த ஸ்மார்ட்போன்கள் 5,599 ரூபாயில் இருந்து 19,499 ரூபாய் வரையிலான விலையில் பல்வேறு தர வரிசையில் விற்பனை செய்யப்படுகிறது. "நாங்கள் எங்களுடைய வணிகரீதியான தொடக்கத்தை நெருங்குவதால் எங்கள் அன்பானவர்களுக்கு (ஆம் உங்களுக்கு), எங்களுடைய வலைமைப்பை பரிசோதித்துப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பை நாங்கல் வழங்குகிறோம்," என்றும் ரிலையன்ஸ் ஜியோ பணியாளரிடம் இருந்து வந்த ஒரு அழைப்பு கூறியது. இத்திட்டத்தின் கீழ் ரிலையன்ஸ் குழும நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் ஜியோவின் 4ஜி சிம் மற்றும் LFY ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு 10 பேருக்கு அழைப்பு விடுக்கலாம். இப்புதிய இணைப்பில் 90 நாட்களுக்கு வரம்பற்ற 4ஜி மொபைல் இண்டர்நெட் மற்றும் போன்கால் சேவைகள் கிடைக்கும். இதனைப் பெற ரிலையன்ஸ் குழும் நிறுவன ஊழியர்கள் அழைப்பு மட்டும் அல்லாமல் 200 ரூபாய் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கூடுதலாக ஜியோ ப்ளே, ஐியோ ஆன்-டிமான்ட், ஜியோ மாக், ஜியோ பிட்ஸ், ஜியோ டிரைவ் ஆகிய ரிலையன்ஸ் ஜியோவின் செயலிகளைப் பயன்படுத்தலாம் எனவும் இந்நிறுவனம் கூறியுள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் சோதனை வலைமைப்பில் சுமார் 5 லட்ச பயனாளர்கள் உள்ளனர். முதல் மாதத்தில் மட்டும் சராசரியாக ஒரு வாடிக்கையாளர் 18 ஜிபி மொபைல் டேட்டா மற்றும் 250 நிமிடத்திற்கு மேலான வாய்ஸ் கால் பயன்படுத்தி வருவதாக ஜியோ தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த சோதனை திட்டங்களின் வெற்றியின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ கூடிய விரைவில் தனது அதிகாரப்பூர்வ மொபைல் சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியரின் அழைப்பு
LYF ஸ்மாரட்போன்
விலை
ரிலையன்ஸ் ஜியோ
10 வாடிக்கையாளர் மட்டும்
200 ரூபாய் கட்டணம்
கூடுதல் சேவைகள்
18 ஜிபி டேட்டா.. 250 நிமிட கால்..
முழுமையான சேவை
ரிசர்வ் வங்கியின் சாட்டை அடி
விஜய்ய்ய் மல்லையா...!
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications