மும்பை: நட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உலக நாடுகள் முழுவதும் உள்ள பல தரப்பட்ட துறை மற்றும் நிறுவனங்களுடன் பணியாற்றி வருகிறது.
இந்நிறுவன பணிகளைக் கையாள சுமார் 3,00,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சரி இந்நிறுவனத்தின் மிகப்பெரிய வாடிக்கையாளர், அதாவது Client யாரென்று தெரியுமா உங்களுக்கு..?
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இக்குழுமத்திற்கு அதிக வருவாய் அளிக்கும் முக்கிய நிறுவனமாக உள்ளது. 2015ஆம் நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனம் இந்திய சந்தையின் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 1 பில்லியன் டாலர் வர்த்தகத்தை அடைந்துள்ளது.
டாடா குழுமத்தின் கீழ் சுமார் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய வாடிக்கையாளர்
இந்திய சந்தையில் 1 பில்லியன் டாலர் அதாவது 6,700 கோடி ரூபாய் வர்த்தகத்தை எட்டிய டிசிஎஸ் நிறுவனம், அரசு நிறுவனம் மற்றும் துறைகளுடன் 250 மில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தைச் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்திய சந்தையில் மத்திய மற்றும் மாநில அரசுகள், டிசிஎஸ் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளராக உருவெடுத்துள்ளது.
அரசு துறை வர்த்தகம்
உலக நாடுகளில் மிகப்பெரிய வர்த்தகத்தை டிசிஎஸ் பெற்று வந்தாலும், இந்திய சந்தையை முக்கிய வர்த்தகத் தளமாகக் கொண்டுள்ளது. இதன் காரணமாக இந்திய சந்தையில் 1 பில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய வர்த்தகத்தை அடைந்துள்ளது.
இந்த அளவை எந்த ஒரு இந்திய மென்பொருள் நிறுவனமும் அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியப் பணிகள்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் மத்திய அரசுடன் பல திட்டங்களில் பணியாற்றி வருகிறது. குறிப்பாகப் பாஸ்போர்ட் இணையதளம், மாநில வாட் வரி செலுத்தும் தளம், இந்தியா போஸ்ட் துறையின் இணையச் சேவைகள் எனப் பல மென்பொருள் மற்றும் டெக்னாலஜி சேவைகளை டிசிஎஸ் வழங்கி வருகிறது.
பிரச்சனைகள்
அரசுகளுடன் பணியாற்றும் போது நாங்கள் பல வகையான சிக்கல்களைச் சந்தித்து வருகிறோம், குறிப்பாக ஒப்பந்த காலம், பணப் பரிமாற்றத்தில் காலதாமதம் எனப் பல. இவை அனைத்தும் எந்தப் பெரிய பிராஜெக்ட்களுக்குச் சளைத்தது அல்ல.
இந்தியா
இத்தகைய பல பிரச்சனைகளைச் சந்தித்தாலும், நாட்டின் பிரமானவளர்ச்சியில் டிசிஎஸ் பங்கு இருக்க வேண்டும் என்பதை மையமாக வைத்துக்கொண்டே நாங்கள் எங்களது சேவை அளித்து வருகிறோம் என டிசிஎஸ் நிறுவனத்தின் சீஇஓ சந்திரசேகரன் தெரிவித்தார்.
டிஜிட்டல் இந்தியா
மேலும் டிசிஎஸ் நிறுவனத்தின் அடுத்த இலக்கு மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் தான் எனவும் சந்திரசேகரன் கூறினார்.
இன்போசிஸ்
சில நாட்களுக்கு முன்பு கூட டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான இன்போசிஸ் மத்திய அரசின் MCA தளத்தை நிர்வகிக்கும் பணியில் அரசுடன் சில பிரச்சனைகளைச் சந்தித்தது.
இருமுனை கத்தி..
அரசு திட்டங்கள் என்பது இருமுனை கத்தி போன்றது. திட்டத்தின் மதிப்புப் பெரியதாக இருந்தாலும், அதில் உள்ள ஆபத்துகள் மிகவும் அதிகம் எனச் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications