மும்பை: நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழும நிறுவனமாகத் திகழும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 2016ஆம் நிதியாண்டுக்கான ஊதிய உயர்வு மற்றும் போனஸ் அளிக்கத் தலைவர் முகேஷ் அம்பானி அனுமதி அளித்துள்ளார்.
இந்நிறுவனத்தில் பணிபுரியும் 20,000 ஜூனியர் மற்றும் நடுநிலை மேலாளர்களுக்கு 8- 10 சதவீதம் வரையிலான ஊதிய உயர்வை அளிக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
8- 10 சதவீதம் என்பது இந்நிறுவனத்தில் வரலாறு காணாத உயர்வாகும்.
7,400 கோடி ரூபாய் லாபம்..
மார்ச் மாதம் முடிந்த காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 8 வருடத்தில் காணாத 7,400 கோடி ரூபாய் லாபத்தை அடைந்துள்ளது.
இதன் காரணமாக 20,000 ஜூனியர் மற்றும் நடுநிலை மேலாளர்களுக்கு 8- 10 சதவீதம் வரையிலான ஊதிய உயர்வு, உயர் மேலாளர்களுக்கு வேரியபில் பே அல்லது வருடாந்திர போனஸ் ஆகியவற்றை 100 சதவீதம் அளிக்கப்படும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஊதிய உயர்வு
இதுமட்டும் அல்லாமல் வரலாறு காணாத வகையில் அதிக ஊதிய உயர்வை அளித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது ஊழியர்கள் அசத்தியுள்ளது.
கடந்த வருடம் இந்நிறுவனம் 8 சதவீதத்திற்கும் குறைவான ஊதிய உயர்வு மற்றும் 85 சதவீத போனஸ் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
ஜியோ-வில் சோகம்
இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு வர்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ, சேவையின் அறிமுகத்திற்கான பணிகளை மிகப்பெரிய அளவில் செய்து வருகிறது.
இதனால் ஜியோ நிறுவன ஊழியர்கள் ஜூன் மாதம் ஊதிய உயர்வு ஆணையைப் பெறுவார்கள் என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
வர்த்தகப் பிரிவினை
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் மொத்த வர்த்தகத்தில் ஜியோ நிறுவன வர்த்தகத்தைத் தனியாகப் பார்க்க முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications