டெல்லி: இந்தியாவில் பெட்ரோலியம் மற்றும் என்ஜினியரிங் பொருட்களின் ஏற்றுமதி குறைந்து வருவதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் 6.9 சதவீத சரிவை சந்தித்து 17 மாதங்களாகத் தொடர் ஏற்றுமதி சரிவை இந்திய சந்தை பதிவு செய்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி அளவு 6.7 சதவீதம் குறைந்து 20.5 பில்லியன் டாலர் என்ற அளவைப் பதிவு செய்துள்ளது இந்திய வர்த்தகச் சந்தை.

இதேபோல் இறக்குமதியும் 23.1 சதவீதம் என்ற மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து 25.4 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் இறக்குமதியின் அளவு 33 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் மார்ச் மாதத்தில் 11 பில்லியன் டாலராக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை, ஏப்ரல் மாதத்தில் 4.8 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இக்குறைந்த அளவு 5 வருடத்திற்கு முன் எட்டியது குறிப்பிடத்தக்கது. 2010ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 2.6 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாத காலகட்டத்தில் உலக முன்னணி பொருளாதார நாடுகளுடன் அதிகளவிலான ஏற்றுமதி சரிவை சந்தித்தது. அமெரிக்காவுடன் 3.9% சரிவு, ஐரோப்பா 0.04% சரிவு, சீனா 25.3% சரிவு, ஜப்பான் உடன் 1.1% சரிவு. இது 2016ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்திற்கான அளவைக் கடந்த வருடம் பிப்ரவரி மாதத்திற்கான அளவுடன் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications