டெல்லி: ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தற்கான நிலுவை தொகையான 43,400 கோடி ரூபாயை யூரோவில் செலுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இத்தொகையைப் பரிமாற்றம் செய்யத் துருக்கி ஹால்க் வங்கியை இந்தியா நாடியுள்ளது.
ஈரான் நாட்டின் மீது வல்லரசு நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்த நிலையில் நிலுவைத் தொகை செலுத்துவதற்கான பணிகள் பல வருடங்களாக முடங்கிப்போனது. தற்போது பொருளாதார மற்றும் வர்த்தகத் தடையை நீக்கப்பட்ட நிலையில் ஈரான் நாட்டுத் தனக்குச் செலுத்த வேண்டிய தொகை விரைவாகச் செலுத்த கோரியுள்ளது.

இந்நிலையில் மே 22-23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஈரான் செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் எண்ணெய் இறக்குமதி செய்தற்கான 6.5 பில்லியன் டாலர் அதாவது 43,400 கோடி ரூபாயைத் துருக்கி ஹால்க் வங்கி மூலம் செலுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் பொதுத்துறை வங்கியுடன் இந்திய பரிமாற்றத்திற்கான பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது.

மங்களூரு ரிபைனரி மற்றும் பெட்ரோகெமிக்கல், எஸ்ஸார் ஆயில், ஹிந்தூஸ்தான் பெட்ரோலியம் ஹெச்பிசிஎல்மிட்டல் எனர்ஜி மற்றும் இந்தியன் ஆயில் இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்க்கான தொகையில் 45 சதவீதத்தை இந்திய ரூபாய் மதிப்பில் கொடுத்த நிலையில் மீதமுள்ள தொகையை யூரோ மிதிப்பில் கோரியுள்ள ஈரான்.

ஈரான் நாடு வங்கிகள் மீது பொருளாதார மற்றும் வர்த்தகத் தடைகள் விதிக்கப்பட்ட நிலையில் பன்னாட்டு பரிமாற்றத்திற்கான வங்கி வாயில் சரியாகச் செயல்படவில்லை. இதனைச் சரிசெய்யும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளது. வங்கி இணைப்புகள் இயல்பு நிலைக்குத் திரும்பிய உடன் நிதி பரிமாற்றத்தை உடனடியாகச் செயல்படுத்தப்பட உள்ளது.
More From GoodReturns

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!



Click it and Unblock the Notifications