டெல்லி: மத்திய அரசின் சோலார் மின் உற்பத்தி திட்டத்திற்கு உலக வங்கி 625 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதியுதவியை அளித்துள்ளது. இத்திட்டத்தில் வீட்டு மற்றும் அரசு கட்டிடங்களின் மேல் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் மின் உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டத்தை வகுத்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் உலக வங்கி உயர்மட்ட குழு கூடுதலாக 120 மில்லியன் டாலர் அளவிலான குறுகிய காலக் கடனாகவும், காலநிலை முதலீட்டு நிதியத்தின் கீழ் 5 மில்லியன் டாலரும் இந்திய அரசுக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.

இந்த நிதியுதவியின் கீழ் இந்தியாவில் Rooftop Solar Photovoltaic (GRPV) செல்களை இந்தியா முழுவதும் உள்ள முக்கியத் தளங்களில் அமைக்கப்பட்டுச் சுமார் 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய உள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள சோலார் மின் உற்பத்தி திட்டத்திற்கு உலக வங்கியின் நிதியுதவி ஒரு உந்து சக்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மூலம் அமைக்கப்பட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications