ஆண்களை விடப் பெண்களுக்கு 27% குறைவான சம்பளம்..ஏன் தெரியுமா..?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அகமதாபாத்: சர்வதேச நாடுகளில் பாலின பாகுபாடு அதிகளவில் குறைந்து வருகிறது, குறிப்பாக இந்தியா, வியட்நாம் போன்ற வளரும் நாடுகளில் மிகவும் வேகமாகக் குறைந்து வருவதாகக் கருத்து நிலவுகிறது. ஆனால் இந்தச் செய்தியை கேட்டால் நீங்கள் இப்படிச் சொல்லமாட்டீர்கள்.

பாரத நாடு என்று அழைக்கும்போதும் பெண்களுக்கு மிகக் குறைவாக அளிக்கப்பட்டது என்பது உண்மை தான். ஆனால் உலகமயமாக்கல், பொருளாதார வளர்ச்சி எனப் பல பரிமாண வளர்ச்சியைக் கண்ட இந்தியாவில் இப்போதும் பெண்களுக்குக் குறைவான சம்பளம் அளிப்பது வருத்தமான செய்தியாகும்.

மான்ஸ்டர்..

மான்ஸ்டர்..

நாட்டின் முன்னணி வேலைவாய்ப்பு தேடுதல் தளமான மான்ஸ்டர், இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் அனைத்துத் தரப்பு ஊழியர்கள் மத்தியிலும் சம்பளம் மற்றும் வேலையைப் பற்றி ஒரு முக்கிய ஆய்வை நடத்தி வருகிறது. இதை மான்ஸ்டர் சேலரி இன்டக்ஸ் என்று அழைக்கப்படும்.

மான்ஸ்டர் சேலரி இன்டக்ஸ் (MSI)

மான்ஸ்டர் சேலரி இன்டக்ஸ் (MSI)

இந்தியாவில் ஆண்களை விடப் பெண்களுக்கு 27 சதவீதம் குறைவான சம்பளத்தை அளிக்கப்படுவதாக மான்ஸ்டர் நிறுவனத்தின் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் இந்த ஆய்வில் ஒரு மணிநேரத்திற்கு ஆண்கள் 288.68 ரூபாய் வருமானம் பெறும் நிலையில் பெண்கள் 207.85 ரூபாய் என்ற குறைவான வருமானத்தைப் பெறுகின்றனர்.

 

பணியிடம் மற்றும் பணி

பணியிடம் மற்றும் பணி

மேலும் இந்த ஆய்வில் பங்குபெற்ற 75 சதவீதம் பேர் தங்களது வேலை மிகவும் திருப்தி அளிக்கும் விதமாக உள்ளதாகவும், 55 சதவீதம் பேர் தங்களது சம்பளம் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் சம்பளம் ஒருபோதும் தான் செய்யும் பணியை விரும்ப ஒரு காரணியாக இல்லை என்று தெரிகிறது.

 

ஆய்வு செய்யப்பட்ட துறைகள்

ஆய்வு செய்யப்பட்ட துறைகள்

மான்ஸ்டர் நிறுவனம் இந்த முக்கிய ஆய்வுகளை ஐடி சேவை, ஹெல்த்கேர், சமுகவலைதளம், கல்வி, ஆராய்ச்சி, நிதியியல் சேவைகள், வங்கியியல், இன்சூரன்ஸ், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, கட்டுமானம், உற்பத்தி ஆகிய துறைகளை மையமாகக் கொண்டு ஆய்வைச் செய்துள்ளது.

பாலின பாகுபாடு

பாலின பாகுபாடு

இந்திய வர்த்தகத் துறையில் உற்பத்தித் துறையில் பாலின பாகுபாடின் அளவு உச்சபட்சமாக 34.9 சதவீதம் என்ற அளவைப் பெற்றுள்ளது. குறைவான அளவாக 17.7 என்ற அளவை வங்கி மற்றும் நிதியியல் துறை, தொலைத்தொடர்பு துறை பெற்றுள்ளது.

ஏன் இந்த நிலை..

ஏன் இந்த நிலை..

இந்திய சந்தையில், நிறுவனங்கள் பதவி உயர்விற்குப் பெண்களை விடவும் ஆண்களை அதிகளவில் தேர்தெடுக்கப்படுகிறார்கள், தாய்மைக்கான காரணங்கள், ஆகியவை பெண்களை விடவும் ஆண்களுக்கு அதிகளவிலான சம்பளத்தை நிறுவனம் அளிக்க வேண்டியுள்ளது என மான்ஸ்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் மோடி தெரிவித்துள்ளார்.

சம்பளம் குறைவு..

சம்பளம் குறைவு..

இதேபோல் இந்த ஆய்வில் போக்குவரத்தில், லாஜிஸ்டிக்ஸ், கம்யூனிகேஷன் துறைகளில் கடந்த வருடத்தை விடவும் 2016ஆம் ஆண்டில் சம்பளத்தில் அளவு அதிகளவில் குறைந்துள்ளது.

வாசகர்களின் கருத்து வரவேற்கப்படுகிறது.!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Women get 27% less pay than men: Monster India

A Monster Salary Index (MSI), on Tuesday, indicated there was a significant gender pay gap of 27 per cent in India.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X