பெங்களுரூ: நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தனது வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்களை இழக்கக் கூடாது எனத் திட்டமிட்டு தனது லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான ஈகார்ட் நிறுவனத்தின் மூலம் C2C அதாவது வாடிக்கையாளர்- வாடிக்கையாளர் மத்தியிலான கூரியர் சேவையைத் துவங்க திட்டமிட்டுள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனம் துவங்க உள்ள இப்புதிய நிறுவனத்தின் பெயர் ஈகார்ட் கூரியர். மேலும் இப்புதிய திட்டம் குறித்துப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் உயர் நிர்வாகத் தலைவர் உறுதி அளித்துள்ளார்.
ஆனால் இந்தக் கூரியர் சேவைக் கொஞ்சம் மாறுபட்டது. எப்படி..?

ஈகார்ட் கூரியர் சேவை
சாதாரணக் கூரியர் சேவையில், நாம் அனுப்ப வேண்டிய பொருட்களைக் கூரியர் அலுவலகத்தில் கொண்டு சென்று, அனுப்ப வேண்டும். ஆனால் ஈகார்ட் கூரியர் சேவையில் கூரியர்க்கான ஆர்டரை ஆன்லைனில் பதவு செய்துவிட்டால், ஈகார்ட் நிறுவனமே நம் இடத்திற்கு வந்து பெறுனரின் முகவரிக்கு டெலிவரி செய்துவிடும்.
இதுவே ஈகார்ட் கூரியரின் சேவை முறை.

இத்திட்டம் முதல்கட்டமாகப் பெங்களூரு பகுதியில் துவங்கப்படும், அதன் பின்னர் டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் துவங்கப்படும் எனப் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
இந்தக் கூரியர் டெலிவரிகள் 2-4 நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும், இதுமட்டும் அல்லாமல் வாடிக்கையாளரின் விருப்பத்தின் பெயரில் ஒரு நாள் டெலிவரியும் செய்யப்படும் எனப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஈகார்ட் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications