பெங்களுரூ: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிர்வாகம், தனது தலைமை நிர்வாக இயக்குனரான விஷால் சிக்காவிற்கு 2015-16ஆம் நிதியாண்டில் 7.45 மில்லியன் டாலர் அதாவது, 48.73 கோடி ரூபாய் சம்பளம் அளித்துள்ளது.
இன்போசிஸ் இன்று மும்பை பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் தனது நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் முன்னால் SAP நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களின் ஒருவரான விஷால் சிக்காவிற்கு அடிப்படை சம்பளமாக 9,06,923 டாலரும், 6.48 மில்லியன் டாலர் போன்ஸ் மற்றும் ஊக்கத்தொகை மற்றும், 51,198 டாலர் நீண்டகாலப் பலனாக மொத்தம் 7.45 மில்லியன் டாலர் என்ற சம்பளத்தை அளித்துள்ளது எனத் தனது வர்த்தகம் மற்றும் வருவாய் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு-இல் இது 48.73 கோடி ரூபாயாகும்.
அதேபோல் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான யுபி பிரவீன் ராவ் 2016ஆம் நிதியாண்டில் 1.3மில்லியன் டாலர் அளவிலான சம்பளம் மற்றும் போனஸ் வழங்கப்பட்டுள்ளதாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
இது அனைத்தும் 2015-16ஆம் நிதியாண்டுக்கான சம்பளம் நிலவரம்.
இன்போசிஸ் நிறுவனத்தின் பாரம்பரியமான கொள்கையைக் கிடப்பில் போட்டு விட்டு நாராயாண மூர்த்தித் தலைமையிலான உயர்மட்ட குழு விஷால் சிக்காவின் செயல்முறை மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சிகளைக் கணக்கிட்டு 2017ஆம் நிதியாண்டில் இவருக்கு 11 மில்லியன் டாலர் வரையில் சம்பளத்தை உயர்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications