மும்பை: சீனாவை மையமாகக் கொண்டு உலக நாடுகளில் ஈகாமர்ஸ் வர்த்தகம் செய்யும் அலிபாபா நிறுவனம் இந்தியாவில் வியாபாரம் செய்யப் பல பிரச்சனைகளைச் சந்தித்தாலும், 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் துவக்க வேண்டும் என்ற உறுதியான திட்டத்துடன் உள்ளது.
இத்திட்டத்தின் முதல் படியாக அலிபாபா நிறுவனம், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் டேட்டா சென்டரை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்திய மண்ணில் டேட்டா சென்டர் அமைப்பதன் மூலம் அலிபாபா நிறுவனத்தின் தனது ஈகாமர்ஸ் வர்த்தகத்தை வலிமைபடுத்த முடியும் என இந்நிறுவனம் நம்புகிறது.

அலிபாபா நிறுவனம் இந்தியாவில் நேரடியாக வர்த்தகம் செய்யவில்லை என்றாலும், பேடிஎம் நிறுவனத்தின் செய்த முதலீட்டு மூலம் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவில் டேட்டா சென்டர் அமைப்பதன் மூலம் ஈகாமர்ஸ் வர்த்தகம் மட்டும் அல்லாமல் கிளவுட் சேவைகள் மூலம் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற முடியும்.


Click it and Unblock the Notifications