சென்னை: மார்ச் மாதத்தின் முடிவில் சிட்டி யூனியன் வங்கியின் மொத்த லாபம் 13.3 சதவீத லாபத்துடன் வங்கித்துறையைக் கலக்கியுள்ளது.
2016ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் இந்திய சந்தையில் முன்னணி வங்கிகளில் ஒன்றாகத் திகழும் சிட்டி யூனியன் வங்கி 13.3 சதவீத உயர்வில் 112.23 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு 99.08 கோடி ரூபாயாக இருந்தது.

இதேபோல் இவ்வங்கியின் 4வது காலாண்டில் மொத்த வருமானத்தின் அளவும் 29 சதவீதம் உயர்ந்து 264.44 கோடி ரூபாயாக உள்ளது. 2015நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் 204.66 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருடாந்திர அடிப்பிடையில் சிட்டியூனியன் வங்கி மொத்த லாபம் 12.6 சதவீதம் உயர்ந்து 444.69 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் மொத்த வருமானமும் 21.5 சதவீதம் உயர்ந்து 981.03 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
காலாண்டு மற்றும் வருடாந்திர முடிவுகளைச் சிட்டியூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனரான காமாகோடி அறிவித்தார்.


Click it and Unblock the Notifications