சென்னை: 2016ஆம் நிதியாண்டில் கடைசி காலாண்டில் சிமெண்ட் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக திகழும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் அதிகளவிலான வர்த்தகத்தை பெற்ற காரணத்தினால் இந்நிறுவனத்தின் லாப அளவுகள் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டை விடவும் 40 சதவீதம் அதிக லாபத்தை சந்தித்துள்ளதால் இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகம் மகிழ்ச்சியில் திழைத்துள்ளது.
10% உயர்ந்த வருமானம்
2016ஆம் ஆண்டின் மார்ச்மாத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மொத்த வருமானம் 10.6 சதவீதம் உயர்ந்து 1,154.08 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
40 சதவீத லாபம்
4வது காலாண்டில் அதிகளவிலான வர்த்தகத்தை அடைந்த காரணத்தால் இந்நிறுவனத்தின் மொத்த லாப அளவுகள் எப்போதும் இல்லாத அளவிற்கு 40 சதவீதம் உயர்ந்து 36.60 கோடி ரூபாயில் இருந்து 51.21 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
உற்பத்தி அளவு
இக்காலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த சிமெண்ட் உற்பத்தி அளவுகள் 24.03 லட்சம் டன்னாகர உயர்ந்துள்ளது. 2016ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் இதன் அளவு 19.98 லட்சம் டன்னாக உயர்ந்திருந்தது.
ஈவுத்தொகை
இந்நிலையில் பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 1 ரூபாய் என்ற ஈவுத்தொகையை அளிக்க இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
நிர்வாக இயக்குனர்
மேலும் நிறுவன பங்குதாரர்கள் என்.சீனிவாசனை அடுத்த 5 வருடத்திற்கு நிர்வாக இயக்குனராக நியமிக்க வலியுறுத்தி ஒப்புதல் அளித்துள்ளனர். வருகிற மே 26ஆம் தேதி முதல் இந்த 5 ஆண்டு கால பணி துவங்குகிறது.
350 கோடி ரூபாய்
இந்நிலையில் 3 வருட காலத்தில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்களுக்காக சுமார் 350 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
நியூஸ்லெட்டர்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications