மும்பை: அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய கடன் சந்தையில் இருந்து கடந்த 30 நாட்களில் சுமார் 6,000 கோடி ரூபாய் நிதியை வெளியேற்றியுள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் வரலாறு காணாத அளவிற்கு முதலீட்டு செய்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்விற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதால், அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் சுமார் 1,495 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
மே 27ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அன்னிய போர்போலியோ முதலீட்டாளர்கள் சுமார் 5,986 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் பத்திரங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து விட்டு வெளியேறியுள்ளனர். ஏப்ரல் மாதத்தில் இதன் அளவு 6,418 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டில் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் 14,406 கோடி ரூபாயும், கடன் சந்தையில் 6,925 கோடி ரூபாய் கடன் சந்தையில் வெளியேற்றியுள்ளனர்.
இதன் மூலம் 2016ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்த தொகையில் சுமார் 7,481 கோடி ரூபாய் வர்த்தகத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications