இந்திய ரூபாய் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நாம் தினமும், ஏன் வருடத்தில் 365 நாட்களும் ஓடி ஓடி வேலை செய்வதற்கு முக்கியக் காரணமும் இந்தப் பணம் தான். இப்படி இருக்க, இந்திய நாணயமான ரூபாய் பற்றி நீங்கள் அறியாத பல சுவாரஸ்யமான தகவல்களையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

5,000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள்

5,000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள்

இந்தியாவில் இன்று அதிக மதிப்புடைய நாணயம் என்றால் அது 1,000 ரூபாய் நோட்டு தான். ஆனால் ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இணைந்து தற்போது இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்துள்ளது.

இதனால் பண புழக்கத்திற்காக ரிசர்வ் வங்கி புதிதாக 2,000 ரூபாய் நோட்டை அச்சடித்து நவம்பர் 10ஆம் தேதி முதல் புழக்கத்திற்கு விடுகிறது.

ஆனால் இந்தியாவில் 5,000 மற்றும் 10,000 ரூபாய் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் 1954 முதல் 1978 வரையிலான காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்தது.

10,000 ரூபாய் நோட்டு

10,000 ரூபாய் நோட்டு

10,000 ரூபாய் பிரிவில் காகித பணத்தினை இந்திய அரசாங்கம் 1938-ல் அச்சிட்டது.

இதன் பின் 1978ஆம் ஆண்டு நாட்டில் கருப்பு பணம் மற்றும் பணம் பதுக்குதலை குறைக்க இந்திய அரசு இதன் புழக்கத்தை முழுமையாக குறைத்தது.

5,000 ரூபாய் நோட்டு

5,000 ரூபாய் நோட்டு

1946 -ஆம் ஆண்டுக் கணக்கில் வராத பணத்தினை ஒழிப்பதற்காக ரூ 1,000 மற்றும் ரூ10,000 ஆகியவை செல்லாததாக அறிவிக்கப்பட்டன. இவை மீண்டும் 1954-ல் நடைமுறைக்கு வந்தது. இந்த முறை (ரூ5,000 ரூபாய் தாளும் அச்சிடப்பட்டது) இவை 1978-ல் மீண்டும் திரும்பி பெறப்பட்டது.

ரூ10,000 அச்சிட முடியுமா..?

ரூ10,000 அச்சிட முடியுமா..?

எனினும், ரூ10,000 வரையிலான பிரிவில், பணத்தினை அச்சிடும் அதிகாரம் ஆர்பிஐ-க்கு உண்டு. உயர்ந்த மதிப்புக் கொண்ட பிரிவில் பணத்தை அச்சிடுவதற்கு,1934- ல் ஏற்படுத்தப்பட்ட ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்திய சட்டத்தில் திருத்தம் செய்தால் கண்டிப்பாக ரிசர்வ் வங்கியால் ரூ10,000 நோட்டை அச்சிட முடியும்.

2,000 ரூபாய் நோட்டுகள்

2,000 ரூபாய் நோட்டுகள்

இந்நிலையில் ரிசர்வ் வங்கி இந்தியாவில் பண புழக்கத்திற்காக அதிக பாதுகாப்பு தன்மை உடைய 500 மற்றும் 2,000 ரூபாய் மதிப்பாலான ரூபாய் நோட்டுகளை அச்சடித்துள்ளது. 

இது நவம்பர் 10ஆம் தேதி முதல் புழக்கத்திற்கு வருகிறது.

பாகிஸ்தானில் இந்திய ரூபாய்

பாகிஸ்தானில் இந்திய ரூபாய்

பாகிஸ்தான் நாட்டின் விடுதலைக்குப் பின் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் வசதிதகளைப் பெறும் வரை, பாகிஸ்தான் இந்திய அரசால் அச்சிடப்பட்ட ரூபாய் தாள்களையே பயன்படுத்தி வந்தது.

இந்திய அரசால் அச்சிடப்படும் ரூபாய் தாள்களில் இருக்கும் வெள்ளை காலி இடத்தில் Government of pakistan என்று அச்சிடப்பட்டு இருப்பதை நீங்கள் படத்தில் காணலாம்.

படம்:ஸ்கூப்வூப்

உலகின் பல பகுதிகளில் ரூபாய்

உலகின் பல பகுதிகளில் ரூபாய்

20ஆம் நூற்றாண்டில் ஆரம்பக் காலத்தில் ரூபாய் என்ற நாணயம் ஏடன், ஓமன், குவைத், பஹ்ரைன், கத்தார், Trucial States,, கென்யா, உகாண்டா, Seychelles மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேபாள்

நேபாள்

இந்நாட்டில் இந்திய அரசால் வெளியிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது.

படம்: பிபிசி

பங்களாதேஷ்

பங்களாதேஷ்

ஒரு காலத்தில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் 5 ரூபாய் நாணயங்களைப் பங்களாதேஷ் நாட்டிற்குப் பிளேட் செய்வதற்காகக் கடத்தப்பட்டது ரிசர்வ் வங்கியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

10 ரூபாய் நாணயம்

10 ரூபாய் நாணயம்

ரிசர்வ் வங்கியால் அச்சிடப்படும் 10 ரூபாய் நாணயத்தை உருவாக்க அரசுக்குச் செலவாகும் தொகை 6.10 ரூபாய் மட்டுமே.

உலோக தட்டுப்பாடு

உலோக தட்டுப்பாடு

இந்தியாவில் உலோகம் மற்றும் அச்சிடத் தொழில்நுட்ப தட்டுப்பாடு காரணமாக ரிசர்வ் வங்கி பல முறை வெளிநாடுகளில் நாணயங்களை அச்சிட்டுள்ளது.

எங்கு அச்சிடப்பட்டது..?

எங்கு அச்சிடப்பட்டது..?

இந்திய நாணயங்கள் இந்தியாவில் எங்கு அச்சிடப்பட்டது என்பதை உணர்த்தும் குறிகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா..?

படத்தில் அதற்கான விடையை நீங்கள் பார்க்கலாம்.

படம்: ஸ்கூப்வூப்

 

கிழிந்த ரூபாய் தாள்கள்

கிழிந்த ரூபாய் தாள்கள்

ரூபாய் நோட்டுகளை நீங்கள் கிழித்துவிட்டாலோ அல்லது 51 சதவீதத்திற்கும் அதிகமாக ரூபாய் தாள்கள் கிழிந்து போனாலோ வங்கிகளில் நீங்கள் எவ்விதமான தடையும் இன்றிப் புதிய ரூபாய் தாள்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

டாலரை விட அதிகம்

டாலரை விட அதிகம்

1971ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரச் சந்தையில் ஒரு ரூபாய்க்கு 13 அமெரிக்க டாலர் சமமாகும். இன்று 67.43ரூபாய் தான் 1 அமெரிக்க டாலர்.

0 ரூபாய்

0 ரூபாய்

இந்தியாவில் ஊழலை ஒழிப்பதற்காக 5th Pillar என்ற ஒரு என்ஜிஓ அமைப்புப் பூஜ்ஜியம் ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. ஆனால் ஊழல் குறையவில்லை.

படம்: ஸ்கூப்வூப்

முதன்முதலில் ரூபாய் நோட்டு

முதன்முதலில் ரூபாய் நோட்டு

முதன்முதலில் இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் எப்போது வெளியிடப்பட்டன?

காகிததினாலான நாணயம் 18ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது. முதலில் பாங்க் ஆ பெங்காள், பாங்க் ஆ பம்பாய், மற்றும் பாங்க் ஆப் மெட்ராஸ் ஆகிய தனியார் வங்கிகள் காகிதத்தினாலான பணத்தை அச்சிட்டன.

 

ஆங்கிலேய அரசு

ஆங்கிலேய அரசு

1861ஆம் ஆண்டுக் காகித நாணய சட்டத்திற்குப் பின் இந்திய அரசிற்கு (ஆங்கிலேய அரசு) காகித பணம் அச்சிடுவதற்கு ஏக போக உரிமை வழங்கப்பட்ட பின்னர் இது நடைமுறைப்படுத்தப்பட்டது.

ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா

ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா

1935-ல் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா நிறுவப்பட்டது, அதற்கு முன்பு வரை காகித பணம் அச்சிடும் உரிமையை இந்திய அரசாங்கம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆறாம் ஜார்ஜ் மன்னர்

ஆறாம் ஜார்ஜ் மன்னர்

1938 -ல் ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியாவினால் அச்சிடப்பட்ட முதல் காகித பணம் ரூ5 ரூபாய் நோட்டு ஆகும்.

அது ஆறாம் ஜார்ஜ் மன்னரின் உருவத்தினைக் கொண்டிருந்தது. அதே ஆண்டில் ரூ10 ரூ100 ரூ1000 ஆகிய ரூபாய் நோட்டுகளும் வெளியிடப்பட்டன.

 

ஆர்பிஐ

ஆர்பிஐ

ஆர்பிஐ விரும்பிய பிரிவில் காகித பணம் வெளியிட முடியுமா? தற்பொழுது ரூ10,ரூ100,ரூ500,ரூ1000 ஆகியவை மட்டுமே அச்சிடப்படுகின்றன. ரூ1, ரூ2, ரூ5 ஆகியவை உலோகத்தினாலான காசுகளாக்கப்பட்டதால், அவை ரூபாய் நோட்டுகளாக அச்சிடுவது நிறுத்தப்பட்டது.

ஆர்பிஐ தான் முடிவு செய்யும்..

ஆர்பிஐ தான் முடிவு செய்யும்..

எத்தனை நோட்டுகள் அச்சிட வேண்டும் என்பதை ஆர்பிஐ முடிவு செய்கிறது. பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அழுக்கடைந்த நோட்டுகளைத் திரும்பப் பெறுதல் ஆகிய காரணிகளின் அடிப்படையில், எத்தனை நோட்டுகள் அச்சிட வேண்டும் என்று ஆர்பிஐ முடிவு செய்யும்.

ஒரு ரூபாய் நோட்டு

ஒரு ரூபாய் நோட்டு

காசுகள் அடிக்கும் பொறுப்பு ஆர்பிஐயை சார்ந்ததல்ல. அது இந்திய அரசைச் சார்ந்தது, எனவே தான் ஒரு ரூபாய் நோட்டுகளில் இந்திய நிதித் துறை செயலாளரின் கையொப்பம் காணப்படுகிறது.

1940இல் போர் கால நடவடிக்கையாக ஒரு ரூபாய் நோட்டு மறு அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு ஒரு ரூபாய் நோட்டு இந்திய அரசால் நாணய அந்தஸ்தை அடைந்து வெளியிடப்பட்டது.

 

1 ரூபாய், 50 பைசா நாணயங்கள்

1 ரூபாய், 50 பைசா நாணயங்கள்

எந்த ஒரு தொகைக்காகவும் ஒரு ரூபாய் (ரூ 1 மற்றும் மேலே) நாணயத்தினைக் கொடுக்கவும்/பெறவும் பயன்படுத்த முடியும். ஆனால் ரூ 10 ரூபாய்க்கு மேற்பட்ட எந்த ஒரு தொகைக்காகவும் 50 பைசா நாணயத்தினைக் கொடுக்கவும்/பெறவும் பயன்படுத்த முடியாது, அதனால் 50 புழக்கம் குறைந்தது. மேலும் ரூ1,000 வரை நாணயத்தினை அச்சடிக்க முடியும், 1,000ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளது.

இதையெல்லாம் எங்கப்பா நாண..." data-gal-src="http:///img/600x100/2017/11/30-1512055795-02-1480665360-fishmoney.jpg">
இதுவும் நாணயம் தான்

இதுவும் நாணயம் தான்

<strong>இதையெல்லாம் எங்கப்பா நாணயமா பயன்படுத்தினாங்க..!</strong>இதையெல்லாம் எங்கப்பா நாணயமா பயன்படுத்தினாங்க..!

 

இது தெரியுமா..?

இது தெரியுமா..?

<strong>ஒவ்வொரு பிராண்டுக்கும் ஒரு மதிப்பு இருக்கு.. தெரியுமா உங்களுக்கு..?</strong>ஒவ்வொரு பிராண்டுக்கும் ஒரு மதிப்பு இருக்கு.. தெரியுமா உங்களுக்கு..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

15 Interesting Facts about The Indian Rupee

15 Interesting Facts You Probably Did Not Know About The Indian Rupee.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X