டெல்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2016-17ஆம் ஆண்டுக்கான பட்ஜெடில் அறிவித்த ஆன்லைன் விளம்பர சேவைக்கான புதிய சரிநிகராக்க வரி (equalization levy) ஜூன் 1 முதல் அமலாக்கம் செய்யப்படுகிறது.
மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தபடி, இப்புதிய சரிநிகராக்க வரி ஜூன் 1ஆம் தேதி முதல் அதாவது இன்று நடைமுறை படுத்தபட்டது. சந்தையில் இந்தச் சரிநிகராக்க வரியை கூகிள் டாக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

அன்லைன் விளம்பர சேவை அளிப்பதன் மூலம் கூகிள், டிவிட்டர், பேஸ்புக் போன்ற பல நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களிடம் இருந்து மிகப்பெரிய வருமானத்தைப் பெறுகிறது.
இதனை முறைப்படுத்தவும், விளம்பர வருவாய்க்குப் பெறப்படும் வருமானத்திற்கு முறையான வரியைப் பெரு நிறுவனங்களிடம் இருந்து வசூல் செய்யவே இப்புதிய சரிநிகராக்க வரியை மத்திய அரசு அறிவித்துள்ளது. சரி வாங்க இந்த வரியைப் பற்றி முழுமையாகப் பார்ப்போம்.

இந்திய நிறுவனம் அல்லாத பன்னாட்டு நிறுவனங்களிடம் ஆன்லைன் அல்லது இணையதள விளம்பர சேவைக்காக இந்தியா நிறுவனங்கள் செலுத்தப்படும் தொகை வருடத்திற்கு 1 லட்சத்திற்கு அதிகமாக இருந்தால் மொத்த தொகைக்கு 6 சதவீத வரியை மத்திய அரசுக்கு இந்திய நிறுவனம் செலுத்த வேண்டும்.
இதன் மூலம் பன்னாட்டு நிறுவன தனது விளம்பர வருவாயை இழக்கக் கூடாது என்பதற்காக இந்திய சந்தையில் தனது நிறுவனத்தைப் பதிவிடும் என்பதே மத்திய அரசின் நோக்கம்.
மேலும் இந்த 6 சதவீத வரியால் இந்தியாவில் இருக்கும் சிறு நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்படும் என்பது வருத்தமான செய்தி.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications