மும்பை: அமெரிக்காவில் சான் டியாகோ மாகாணத்தில் இருக்கும் நிட்ராடைன் இன்க் என்னும் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 16 மில்லியன் டாலர் அதாவது 108 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்நிறுவனத்தில் 54 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில் மீதமுள்ள தொகையை 2017 மார்ச் மாதத்திற்குள் செய்ய உள்ளதாக மும்பை பங்குச்சந்தைக்கு இந்நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நிட்ராடைன் இன்க் கல்வி மற்றும் விஷன் அடிப்படையிலான அனல்டிக் சேவைகளை மேலாண்மை, ஆட்டோமொபைல், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு துறைக்கான சேவை வழங்கும் மென்பொருளை உருவாக்கும் பணியில் உள்ளது.
இந்த முதலீட்டு மூலம் ரிலையன்ஶ் இண்டஸ்ட்ரீயல் இண்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனம் நிட்ராடைன் இன்க் நிறுவனத்தின் 1.5 கோடி பங்குகளை அதாவது 40 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.


Click it and Unblock the Notifications