இனி 30 நாட்கள் கிடையாது 10 நாட்கள் தான்.. பிளிப்கார்ட் ரிட்டன் பாலிஸி-யில் புதிய மாற்றம்..!

டெல்லி: நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தனது ரிட்டன் பாலிஸியில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

இணையத்தில் வாங்கிய பொருட்களைப் பிடிக்கவில்லை என்றாலோ, அல்லது தரம் குறைவாக இருந்தாலோ 30 நாட்களுள் இந்நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளகொள்ளும். இதுவே ஆன்லைன் வர்த்தகத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையாக மக்கள் மத்தியில் விளங்கியது.

இந்நிலையில் தற்போது தனது திரும்பப் பெறும் கொள்கையை அதாவது, ரிட்டன் பாலிஸியை மாற்றியுள்ளது.

10 நாட்கள் மட்டுமே

10 நாட்கள் மட்டுமே

இணையத்தில் செய்த பொருட்களை வாடிக்கையாளர் விருப்பத்தின் பெயரில் 30 நாட்களுக்குள் திரும்பப்பெற்று வந்த பிளிப்கார்ட் இனி 10 நாட்களுக்குள்ளான காலக்கட்டத்தில் மட்டுமே திரும்பப்பெற உள்ளதாக அறிவித்துள்ளது.

விற்பனையாளர்கள் கமிஷன்

விற்பனையாளர்கள் கமிஷன்

அதுமட்டும் அல்லாமல் பிளிப்கார்ட், அமேசான் போன்ற விற்பனை தளங்களைப் பயன்படுத்தி இணையத்தில் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் இந்நிறுவனங்களுக்குத் தங்களின் விற்பனை அளவுகளைப் பொருத்து கமிஷன் அளிக்க வேண்டும்.

இந்தக் கமிஷன் அளவைச் சமீபத்தில் அமேசான் உயர்த்திய நிலையில் பிளிப்கார்ட் நிறுவனமும் தனது கமிஷன் அளவை உயர்த்தியுள்ளது.

 

கமிஷன்

கமிஷன்

அதிகக் கமிஷன் பெறுவதன் மூலம் நஷ்டத்தில் செயல்படும் பிளிப்கார்ட் கணிசமான லாபத்தை அடையும் எனத் திட்டமிட்டு கமிஷன் அளவை உயர்த்தியுள்ளது.

இதன் மூலம் தற்போது பிளிப்கார்ட் தனது கமிஷன் அளவை 9 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

 

ரிட்டன் பாலிஸி

ரிட்டன் பாலிஸி

ஏற்கனவே அமேசான் நிறுவனத்தின் தாக்கத்தில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தை இழந்து நிற்கும் பிளிப்கார்ட், தனது ரிட்டன் பாலிஸியை 30 நாட்களில் இருந்து 10 நாட்களாகக் குறைத்த நிலையில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை இழக்க உள்ளது.

ஆனால் இந்த 10 நாள் ரிட்டன் பாலிஸி மாற்றம் அனைத்துப் பொருட்களுக்கு அல்லாமல் பிளிப்கார்ட் தளத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள், புத்தகம் மற்றும் மொபைல் போன்கள் ஆகியவற்றுக்கும் மட்டும் எனவும் தெரிவித்துள்ளது.

 

பிற பொருட்கள்

பிற பொருட்கள்

ஆடைகள், காலணிகள், கைக்கடிகாரம் மற்றும் மூக்குக்கண்ணாடிகள் மற்றும் பிற பேஷன் அணிகலன்களுக்கு 30 நாள் ரிட்டன் பாலிசி பொருந்தும் எனவும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

ஸ்னாப்டீல்

ஸ்னாப்டீல்

சந்தையின் முன்னணி நிறுவனங்கள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தங்களது கமிஷன் அளவுகளை உயர்த்தியுள்ளதால், சக போட்டி நிறுவனமான ஸ்னாப்டீல் புதிய விற்பனையாளர்களை அதிகளவில் பெறும்.

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+