டெல்லி: உலகில் வளர்ந்து வரும் 30 நாடுகளில், வர்த்தகம் செய்யச் சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 2016ஆம் ஆண்டில் 13 இடங்கள் முன்னேறி 2வது இடத்தைப் பிடித்துள்ளது என ரீடைல் சந்தைக் குறித்த ஆய்வு தெரிவித்துள்ளது.
ஒரு வருடத்தில் 13 இடங்கள் முன்னேறி 2 இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ள மிகப்பெரிய வெற்றியாகும். அப்போ முதல் இடத்தில் எந்த நாடு இருக்கிறது..?
ஆய்வுகளும், தரவரிசை பட்டியலும்..
சர்வதேச சந்தைகளில் ரீடைல் முதலீட்டு குறித்து 2016 குளோபல் ரீடைல் டெவலப்மென்ட் இண்டக்ஸ் என்ற ஆய்வை உலகில் வளர்ச்சி அடையும் 30 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் முக்கியக் காரணிகளாகக் கருதப்படும் ஜடிபி வளர்ச்சி மற்றும் அன்னிய முதலீட்டுக் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளில் இந்திய சிறந்து விளங்குவதால் ஒரு வருட காலத்தில் இந்தியா 15வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்குத் முன்னேறியுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள்
இந்தியாவின் 2வது இடத்திற்கு முன்னேறியது பன்னாட்டு நிறுவனங்கள் நாட்டின் ரீடைல் சந்தையில் அதிகளவிலான வர்த்தகச் சுதந்திரத்தைக்காட்டுகிறது.
முதல் இடத்தில்..?
இந்தியா 2வது இடத்திற்கு முன்னேறிய நிலையில் சீனா இப்பட்டியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்திய ரீடைல் சந்தை
2013-2015ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் இந்திய ரீடைல் சந்தை சுமார் 8.8 சதவீதம் அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் எதிரொலியாக மொத்தை விற்பனையின் மதிப்பு 1 டிரில்லியன் டாலராக உயர்ந்து உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வேகமான வளர்ச்சி
ரீடைல் சந்தையின் வளர்ச்சி, அன்னிய முதலீட்டு அளவுகள் அதிகரிப்பு மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஆகியவை உலகச் சந்தையில் இந்திய நாட்டை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் முதல் இடத்தில் உள்ளது.
ஈகாமர்ஸ்
இந்தியாவில் ரீடைல் சந்தை வரிவாக்கத்திற்கு முக்கியமான காரணம் ஈகாமர்ஸ் துறை என்று 2016 குளோபல் ரீடைல் டெவலப்மென்ட் இண்டக்ஸ் ஆய்வு தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications