மும்பை: ரிசர்வ் வங்கி கணித்ததைப் போலவே வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடன் விகிதமான ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றத்தை அறிவிக்கவில்லை.
நிதியமைச்சகம் நாட்டின் வளர்ச்சி சூழ்நிலைக்கு ஏற்ப ரெப்போ விகிதத்தில் அதிகப்படியாக 50 அடிப்படை புள்ளிகள் முதல் 25 அடிப்படை புள்ளிகளைக் குறைக்க ரிசர்வ் வங்கியை வலியுறுத்திய போதும், ஆர்பிஐ பருவமழை, பணவீக்க அளவுகள், விவசாயத் துறையின் உற்பத்தி அளவுகளைக் காரணம்காட்டி வட்டி குறைப்பை அறிவிக்க மறுத்துள்ளது.
ரெப்போ மற்றும் சிஆர்ஆர் விகிதம்
செவ்வாய்க்கிழமை (இன்று) நடந்து முடிந்துள்ள ரிசர்வ் வங்கியின் நாணய மறுஆய்வு கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் ரெப்போ விகிதம் 6.50%, CRR 4% விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லாமல் அறிவித்துள்ளது.
பணவீக்கம்
மேலும் ராஜன் கூறுகையில் இன்றளவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பணவீக்கம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதன் காரணமாகவே பணவீக்கம் மற்றும் உணவுப் பொருட்களின் அதிக விலைமதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை.
சேவைத்துறை
இதனுடன் சேர்த்துச் சேவைத்துறை மந்தமான டெலிவரிகள் நாட்டின் வளர்ச்சியை அதிகளவில் பாதித்துள்ளது. இதனால் ஏற்றுமதி சேவையில் இந்தியா தொடர்ந்து பின்தங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி விகிதம்
நடப்பு நிதியாண்டிலும் நாட்டின் வளர்ச்சி விகித்தை 7.6 சதவீதமாக ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ளது.
முதலீட்டு அளவுகள்
நாட்டின் வளர்ச்சி சிறப்பாக உள்ள இத்தருணத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடு அதிகமாக இருந்தாலும் தனியார் துறை நிறுவனங்களின் முதலீட்டு அளவு மிகவும் குறைவாக உள்ளது. இது நாட்டின் வளர்ச்சி உகந்தது அல்ல என்றும் ரகுராம் ராஜன் கூறினார்.


Click it and Unblock the Notifications