டெல்லி: ஜூன் 11 தேதி (நாளை) 7வது சம்பள கமிஷன் அமைப்பு பல லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்த அனைத்து இறுதிக்கட்ட முடிவுகளை ஏட்டுக்கப்பட உள்ளது.
இக்கூட்டம் முடிந்த சில நாட்களிலேயே சம்பள உயர்வு அமலாக்கத்திற்கு வந்துவிடும்.
இறுதிக்கட்ட முடிவுகள்
பி.கே சிங் தலைமையிலான செயலாளர்கள் அதிகார குழு வருகிற ஜூன் 11ஆம் தேதி 7வது சம்பள கமிஷன் அமைப்பைச் சந்தித்து மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் பிற சலுகைகள் குறித்து அமலாக்கம் முன் இதுகுறித்து இறுதிக்கட்ட முடிவுகளை எடுக்க உள்ளது
அமலாக்கம்
இக்கூட்டம் முடிந்த சில நாட்களிலேயே மத்திய நிதியமைச்சகம் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் இதர சலுகைகளை அமலாக்கம் செய்யும் என்பது உறுதியானது.
21,000 ரூபாய் மாத சம்பளம்
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்சமாக 21,000 ரூபாயும் அதிகப்படியாக 2.7 லட்சம் ரூபாயும் மாத சம்பளமாக இருக்க வேண்டும் என 7வது சம்பள கமிஷன் அமைப்பு மற்றும் நிதியமைச்சகத்திடம் பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.
ரூ.20,000 அதிகம்
இது பழைய சம்பள அடிப்படையை விடவும் 3,000 ரூபாய் அதிகமாகும். அதிகப்படியான சம்பளத்தில் 20,000 ரூபாய் அதிகமாகும்.
42 லட்சம் ஊழியர்கள்
இப்புதிய சம்பள கமிஷன் அமலாக்கம் செய்வதன் மூலம் சுமார் 42 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்ச ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்.
போராட்டம்
இதே நாளில் தான் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications