மும்பை: சர்வதேச வர்த்தக மற்றும் பொருளாதார துறையை குறித்து அவ்வபோது ஆய்வுகளை செய்து வரும் போர்ப்ஸ், 2016ஆம் ஆண்டுக்கான உலகின் டாப் 25 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் வழக்கம்போல் அமெரிக்க பெண்கள் ஆதிக்கம் சிறப்பாக இருந்தாலும், பல போட்டிகளை தாண்டி டாப் 100 பெண்கள் பட்டியிலில் 4 இந்திய பெண்மணிகள் இடம்பெற்றுள்ளனர்.
அருந்ததி பட்டாச்சார்யா
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்திய வங்கியின் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யா உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் 25வது இடத்தை பிடித்து இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்துள்ளார்.
சந்தா கோச்சார்
அருந்ததி பட்டாச்சார்யா தொடர்ந்து நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சார் இப்பட்டியலில் 40வது இடத்தை பிடித்துள்ளார்.
கிரன் முசம்தார் ஷா
பயோபார்மா மருந்து ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் பயோகான் நிறுவனத்தின் தலைவரான கிரன் முசம்தார் ஷா பேர்ப்ஸ் வெளியிட்டுள்ள இப்பட்டியலில் 77வது இடத்தை பிடித்துள்ளாது.
ஹிந்தூஸ்தான் டைம்ஸ்
மீடியா முதல் எப்எம் ரேடியோ ஸ்டேஷன் வரை, ஆன்லைன் ஜாப் போர்ட்ல் முதல் கல்வி துறை வரை பல துறைகளில் இருக்கும் ஹிந்தூஸ்தான் டைம்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஷோபனா பாத்திய இப்பட்டியலில் 93வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திரா நூயி
அதேபோல் இந்திய- அமெரிக்கா பெண்மணியான பெப்சி கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இந்திரா நூயி இப்படியலில் 15வது இடத்தை பிடித்தார்.
100 பெண்கள்
போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் வர்த்தக துறையை சார்ந்தசவர்கள் மட்டும் அல்லாமல் பில்லியனர்கள், மீடியா, அரசியல், சமுகசேவகர்கள், என்ஜீஓ மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தவர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.
டாப் 10
இப்பட்டியலில் இடம் பெற்ற டாப் 10 சக்திவாய்ந்த பெண்களை பற்றி இப்போது பார்ப்போம்
ஏஞ்சலா மெர்கல்
ஐரோப்பிய நாடுகளை மிகப்பெரிய நிதி நெக்கடியில் இருந்து வீழாமல் இருக்கு காரணம் ஜெர்மனி நாட்டு தான். இந்நாட்டின் அதிபரான ஏஞ்சலா மெர்கல் 2016ஆம் ஆண்டின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் முதல் இடத்தை அளித்துள்ளது.
ஹிலாரி கிலின்டன்
அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் பட்டியலில் முதல் வரிசையில் இருக்கும் முன்னாள் அமெரிக்க அதிபர் கிலின்டனின் மனைவி ஹிலாரி கிலின்டன் இப்பட்டயிலில் 2வது இடத்தை பிடித்துள்ளார்.
ஜென்னட் யெலன்
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் வங்கியின் தலைவர் ஜென்னட் யெலன் இப்படியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார்.
மெலின்டா கேட்ஸ்
உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமாக விளங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் மனைவி தற்போது உலகின் பல நாடுகளின் மருந்துவ உதவியில் இருந்த கல்வி வரை பல விதமான சேவைகளை தனது பில் அண்ட் மெலின்டா கேட்ஸ் அறைக்கட்டளையில் மூவம் செய்து வருகிறார்.
இவருக்கு 4வது இடம்.
மேரி பாரா
அமெரிக்காவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மேரி பாரா இப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.
ஐஎம்எப் தலைவர்
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டின் லகர்டே போர்ப்ஸ் வெளியிட்டுள்ள இப்பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளார்.
ஷெரில் ஸான்ட்பெர்க்
பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஷெரில் ஸான்ட்பெர்க் 7வது இடத்தை பிடித்துள்ளார்.
யூடியூப்
கூகிள் நிறுவனத்தின் முக்கிய வர்த்தக பிரிவான யூடியூப் தலைவர் சூசன் வ்வசிச்க் பேர்ப்ஸ் நிறுவனத்தின் 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளார்.
எச்பி
சர்வதேச வர்த்தக சந்தையில் மென்பொருள் மற்றும் வன்பொருள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் எச்பி நிறுவனத்தின் தலைவர் மெக் வித்மென் இப்பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளார்.
ஸ்டேன்டெர்
ஸ்பைன் பான்கோ ஸ்டேன்டெர் நிறுவனத்தின் தலைவரான அனா பட்ரிக்கா போடின் இப்பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கேரள சம்மர் பம்பர் லாட்டரி BR-108 முடிவுகள் ரூ.10 கோடி ஜாக்பாட் யாருக்கு?

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications