ஐடி ஊழியர்கள் யூனியன் அமைக்க உரிமை உண்டு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்களது 4.5 லட்சம் ஊழியர்களை, தொழிலாளர் சங்கம் அமைப்பதில் காலம் காலமாகத் தடையாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் இதே நிலை தான் என்பதை மறுக்க முடியாது.

பொதுவாக உற்பத்தி தொழிற்சாலைகளில் ஊழியர்களின் நலனை பாதுகாக்க நிர்வாகத்திற்கு எதிராகவும் குரல் கொடுக்கத் தொழிலாளர் சங்கம் அமைக்கப்படும். இதன் மூலம் ஊழியர்களின் பிரச்சனையை நேரடியாக நிர்வாகத்திற்கு முறையிட முடியும்.

160 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடித்துறையில், ஊழியர்களுக்காகப் போராடும் ஒரு சங்கம் கூட இதுவரை அமைக்கப்படவில்லை. இதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு

ஒரு மாநிலத்தில் இருக்கும் நிறுவன ஊழியர்களின் நலனுக்காக இந்நிறுவனத்தின் செயல்பாட்டையும், சட்டதிட்டத்தையும் மாற்ற அம்மாநில அரசுக்கு உரிமை உண்டு.

இதன்படி இனி தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து ஐடி மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களும் தொழிலாளர் சங்கத்தை அமைக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வாமாக அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரமும், உரிமையும் அவர்களுக்கு உண்டு என்பதையும் தெரிவித்துள்ளது.

 

மாநில தொழிலாளர் சங்கம்

மாநில தொழிலாளர் சங்கம்

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி என்ற மாநில தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு அரசுக்கு ஐடி நிறுவனங்களில் தொழிலாளர் சங்கத்தை அமைப்பது குறித்து மனு ஒன்றை அளித்தது.

உரிமை உண்டு

உரிமை உண்டு

இந்த மனுவிற்குத் தமிழக அரசு செயலாளர் குமார் ஜெயந்த் அளித்த பதில் கடித்ததில், ஐடி ஊழியர்கள் தொழிலாளர் சங்கத்தை அமைக்க எவ்விதமான தடையுமில்லை,

அவர்களது பிரச்சனையைத் தொழிற்துறை முரண்பாட்டுச் சட்டம் 1947இன் கீழ் நிர்வாகத்திடமும், நீதிமன்றத்திலும் முறையிடலாம். மேலும் தொகுதி 2(k) சட்டத்தின் கீழ் முறையிட்ட பிரச்சனைக்குப் பதிலும், தீர்வையும் கோர முடியும் எனத் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது.

 

 

ஐடி நிறுவனங்கள்

ஐடி நிறுவனங்கள்

தமிழ்நாடு அரசின் இந்தப் பதில் ஐடி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஊழியர்களின் உரிமை என்பதை ஐடி நிறுவனங்கள் ஏற்க மறுக்கிறது.

துவக்கம் தமிழ்நாட்டில் இருந்து..

துவக்கம் தமிழ்நாட்டில் இருந்து..

தொழிற்சாலைகளில் மட்டும் இருந்த இந்திய தொழிலாளர் அமைப்புகள் தற்போது 160 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி துறைக்கும் நுழைந்திருப்பது தமிழ்நாட்டின் வாயிலாகவே.

இதைப் பார்த்து இந்தியாவில் பிற மாநிலங்களுக்கும் ஊழியர்களுக்கான உரிமையை அளிக்கலாம்.

 

கடமை

கடமை

ஐடி நிறுவனங்களில் எதற்குத் தொழிலாளர் சங்கம் என்று நீங்கள் கேட்கலாம். எந்த ஒரு நிறுவனத்திலும் தொழிலாளர் அமைப்பு மிகவும் முக்கியமானது. அதனை அமைப்பது ஐடி நிறுவனங்களின் கடமையும் கூட.

எதற்குச் சங்கம்..?

எதற்குச் சங்கம்..?

இத்தனை வருடங்களாக ஊழியர்களின் உரிமை மற்றும் சுதந்திரத்தை அளிக்காமல் ஏமாற்றி வந்துள்ளது. இத்தகைய சங்கம் அமைப்பதன் மூலம் ஐடி நிறுவனங்களின் நடக்கும் அட்டூழியம் அனைத்தும் வெளிப்படும்.

குறிப்பாக மட்டமான காரணத்தைக் காட்டி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புவதில் துவங்கி, பாலியல் கொடுமை, நிர்வாகத்தின் மெத்தனம், ஊழியர்களுக்கு எதிராக நிர்வாகம் எடுக்கும் முடிவுகள் என அனைத்தையும் முறையாகக் கையாள இத்தகைய தொழிலாளர் அமைப்புகள் தேவை.

தொழிலாளர் சங்கத்தின் தேவையை நீங்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் செயல்பாடு மூலம் புரிந்துக்கொள்ளலாம்.

 டாடா கன்சல்டன்சி சர்விசஸ்

டாடா கன்சல்டன்சி சர்விசஸ்

இந்தியாவின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்விசஸ் நிறுவனத்தில் சுமார் 30,000 பணியாளர்களை 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் பணிநீக்கம் செய்ய உள்ளதாக இந்நிறுவனத்தின் நிர்வாகம் தெரிவித்தது. இதன்படி சில பணியாளர்களுக்கு பிங்க் ஸ்லிப்-ம் நிர்வாகம் கொடுத்தது.

சமுக வளைதள புரட்சி

சமுக வளைதள புரட்சி

இந்த நடவடிக்கையை எதிர்த்து இந்நிறுவன பணியாளர்கள் சமுக வளைதளங்கள் மற்றும் இணையதள வாயிலாக ‘We are against TCS layoff' என்ற பெயரில் போராட்டங்கள் நடத்தினர்.

பிங்க் ஸ்லிப்

பிங்க் ஸ்லிப்

"மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம், உங்களது சேவை இனி எங்களது நிறுவனத்திற்கு தேவையில்லை. இந்த கடிதம் கிடைத்த 30 நாட்களுக்குள் நீங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும்". என்ன ஒன்னுமே புரியலையா??? இது தான் 1000க்கணக்கான டிசிஎஸ் பணியாளர்களுக்கு வந்த கடிதம் (பிங்க் ஸ்லிப்).

புளியை கரைத்து

புளியை கரைத்து

2015ஆம் ஆண்டு துவக்கத்தில் டிசிஎஸ் நிறுவனம் தனது 1,000த்திற்கும் அதிகமான பணியாளர்களுக்கு பிங்க் ஸ்லீப் வாரி வழங்கியது. இதனால் இந்நிறுவனத்தில் பணியாற்றும் 3 இலட்சம் பணியாளர்கள் மட்டும் அல்லாமல், இந்தியாவில் இருக்கும் அனைத்து ஐடி பணியாளர்களுக்கும் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

பெரிய மேட்டர் ஒன்றும் இல்லை..

பெரிய மேட்டர் ஒன்றும் இல்லை..

இதுக்குறித்து இந்நிறுவன செய்தி தொடர்பாளர்களிடம் கேட்டபோது,"இந்த ஆன்லைன் போராட்டத்தை குறித்து கருத்து தெரிவிக்கும் அளவிற்கு பெரிய விஷயம் இல்லை, மேலும் இது மென்பொருள் நிறுவனங்கள் மத்தியில் நடக்கும் மிகவும் சாதாரணமான விஷயம்" என்று நிதாணமாக தெரிவித்தார்.

கூட்டு முயற்சி

கூட்டு முயற்சி

டிசிஸ் நிறுவனத்தின் ஆட்குறைப்பு செய்தால் இந்தியாவில் பிற நிறுவனங்களிலும், இதேபோன்ற நிலை பின்தொடரும் என்று உணர்ந்த ஐடி பணியாளர்கள்.

அனைத்து நிறுவனங்களிலும், பணியாளர்கள் மத்தியில் ஒரு கூட்டணியை உருவாக்கி ஆட்குறைப்பு நடவடிக்கையை எதிர்க்க தயாராகி உள்ளனர்.

சிஐடியு

சிஐடியு

இந்தியாவில் ஐடித் துறை கால்பதித்து 20 வருடங்கள் ஆன நிலையில், இத்துறை பணியாளர்கள் எந்த ஒரு யூனியன்களிலும் இணைந்ததில்லை.

ஆனால் டிசிஎஸ் நிறுவனத்தின் ஆட்குறைப்பு திட்டம் இந்திய ஐடி பணியாளர்களை ஒன்று சேர்த்துள்ளது என சிஐடியு யூனியன் உடன் இணைந்த அசோசியேஷன் ஆஃப் ஐடி எம்பிளாயிஸ் (AITE) அமைப்பின் தலைவர் ஜெயன் தெரிவித்தார்.

 

சென்னையின் FITE

சென்னையின் FITE

டிசிஎஸ் பணியாளர்களின் ஆட்குறைப்பை எதிர்த்து முதன் முறையாக சென்னையில் FITE அமைப்பு தோன்றியது இதன் எழுச்சியே பிற அமைப்புகள் உருவாக காரணமாக அமைந்தது குறிப்பிடதக்கது.

சாப்ட்வேர் பணியாளர்களுக்கான உதவிக்குழு

சாப்ட்வேர் பணியாளர்களுக்கான உதவிக்குழு

இந்தியாவில் அனைத்து துறை பணியாளர்களுக்கான பிரச்சனைகளை களைய ஏதாவது ஒரு உதவிக்குழு உள்ளது.

ஆனால் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் ஐடி பணியாளர்களின் வாழ்வு நிலையை காப்பாற்ற ஒரு குழுக்கூட இல்லை என்று பல காலமாக கேள்வி இருந்தது வந்தது. இதற்காக சென்னையில் Forum for IT Employees என்ற புதிய கூட்டணி உருவாகியது.

தற்போது இப்பிரச்சனைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

 

போராட்டத்தின் வெளிப்பாடு

போராட்டத்தின் வெளிப்பாடு

ஊழியர்களின் ஒட்டுமொத்த குறல் மற்றும் சமுகவலைதளம் புரட்சி ஆகியவற்றின் மூலம் டிசிஎஸ் நிறுவனம் தனது பணிநீக்க நடவடிக்கையை கைவிடுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+