40% வேலைவாய்ப்பை விழுங்கும் 'ஆட்டோமேஷன்'.. சோகத்தில் முழ்கிய ஐடி ஊழியர்கள்..!

சென்னை: பள பளவெனக் கண்ணாடிகள் கட்டிடங்கள், அலுவலகம் முழுவதும் ஏசி, நுனி நாக்கில் ஆங்கிலம், உயர்தரமான வாழ்க்கை முறை இதுவே ஐடி துறையின் பிம்பமாக நாம் பார்ப்பது.

ஆனால் கடந்த சில வருடங்களாக இவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை ஆட்டோமேஷன். இதைப் பற்றி வெளியுலகில் அதிகளவில் யாரும் பேசி இருக்க மாட்டார்கள். இத்தகையை ஆட்டோமேஷன் பிரச்சனையைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம். | நியூஸ்லெட்டர்

மிஸ்டர் எக்ஸ்

மிஸ்டர் எக்ஸ்

தன் பெயரை வெளியிட விரும்பாத மிஸ்டர் எக்ஸ் (32) நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் நிறுவனத்தில் பணிபுரிகிறார், கடந்த சில நாட்களாக இவர் காலையில் துக்கத்தில் இருந்து எழும்போது ஒருவிதமான அச்சத்துடனே எழுகிறார், காரணம் அட்டோமேஷன்.

அட்டோமேஷன்

அட்டோமேஷன்

அமெரிக்க வங்கிக்கு ஐடி பாதுகாப்பு சேவைகளை மேம்படுத்துவதும், நிர்வகிப்பதுமே இவரது வேலை. இத்திட்டத்தின் துவக்கத்தில் 12க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்த நிலையில், தற்போது 3 பேர் மட்டுமே இத்திட்டத்தில் பணியாற்றுகின்றனர்.

திட்டமிடப்பட்ட எந்த வேலையும் குறையவில்லை ஆனால் அனைத்து வேலைகளும் இயந்திரமயமாக்கப்பட்டு அதாவது அட்டோமேஷன் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களின் தேவை அதிகளவில் குறைந்துள்ளதாக அவர் கூறுகிறார்.

கடந்த 6 வருடத்தில் இப்படியொரு மாற்றத்தைத் தான் பார்த்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 

40 சதவீத வேலைவாய்ப்புகள்

40 சதவீத வேலைவாய்ப்புகள்

இந்தியா முழுவதும் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட ஐடி நிறுவனங்களில் 37 லட்சம் பேர் பணியாற்றும் இத்துறையில் வேகமாகப் பரவிவரும் இந்த அட்டோமேஷன் மூலம் அடுத்த 3 வருடத்தில் 40 சதவீத ஊழியர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பயம்

பயம்

இவரது அச்சம் சரியானதே, மிஸ்டர் எக்ஸ் பணியாற்றும் இந்த ஐடி நிறுவனம் இவரது பணியையும் ஆட்டோமேஷன் செய்யப்பட்டால் அவருக்கு அந்த இடத்தில் வேலையில்லை. புதிய பிராஜெக்டுக்கு இவர் மாற்றப்படுவார் என்று நீங்கள் சொல்வது சரி தான், ஆனால் நிச்சயமாக மாற்றப்படுவாரா என்பதை உறுதியாகச் சொல்ல முடியமா. கண்டிப்பாக முடியாது.

இன்போசிஸ்

இன்போசிஸ்

விஷால் சிக்கா தலைமையிலான இன்போசிஸ் புதிய டெக்னாலஜிகளில் வர்த்தகம் தேடும் விதமாக ஆட்டோமேஷன் மற்றும் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறைகளைத் தேர்ந்தெடுத்துள்ளது.

விப்ரோ

விப்ரோ

பல வருடங்களுக்கு முன்பே ஆட்டோமேஷன் பணிகளைச் செய்து வரும் விப்ரோ, தற்போது 4,500 மென்பொருள் வல்லுனர்களைப் புதிய டெக்னாலஜிகளைக் கற்றுக்கொள்வதற்காக Re-Skill திட்டத்தில் வைத்துள்ளனர்.

ஐபிஎம்

ஐபிஎம்

அதேபோல் ஐடித்துறையில் 100 ஆண்டுகளுக்கு அதிகமாக வர்த்தகம் செய்து வரும் ஐபிஎம் நிறுவனத்தில் ஆட்டோமேஷன் திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளதால் அடுத்த 1 வருடத்தில் 14,000 ஊழியர்களை இந்நிறுவனத்தில் இருந்து வெளியேற்ற உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஐடி மற்றும் பிபிஓ

ஐடி மற்றும் பிபிஓ

மேலும் ஐடி மற்றும் பிபிஓ துறையில் ஆட்டோமேஷன் உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் இருக்கும் முக்கிய ஐடி நிறுவனங்களே தங்களது ஊழியர்களைப் பணியில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள்

பொதுவாக இந்திய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை எடுத்த எடுப்பில் நிறுவனத்தை விட்டு வெளியேற்றுவதில்லை. ஆனால் சில நேரங்களில் நிறுவனங்கள் தங்களது மனதை மாற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் தான் தற்போது ஐடி நிறுவனங்கள் உள்ளது.

 

ஆட்சேர்ப்பு நிறுவனங்கள்

ஆட்சேர்ப்பு நிறுவனங்கள்

இந்திய ஐடித்துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் அதே சூழ்நிலையில், ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ வெளியேற்றப்படுகின்றனர் என்று இந்தியாவில் பல ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் கூறுகிறது.

ஐடித்துறையில் மட்டும் தானா..?

ஐடித்துறையில் மட்டும் தானா..?

சத்தியமாக இல்லை, உற்பத்தி, தயாரிப்பு, லாஜிஸ்டிக்ஸ், கலை, மருந்துவம், என அனைத்துத் துறைகளிலும் ஆட்டோமேஷன் என்பதை விட இயந்திரங்கள் (Robots) அதிகளவில் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது.

ஆனால் ஐடித்துறையில் பணியாளர்கள் குறைப்பு குறுகிய காலத்திதல் அதாவது ஆட்டோமேஷன் செய்யப்பட்ட சில வாரங்களில் ஊழியர்கள் வெளியேற்றப்படுவோ அல்லது வேறு பிரிவிற்கோ மாற்றப்படுகிறது.

 

160 பில்லியன் டாலர் துறை

160 பில்லியன் டாலர் துறை

பிபிஓ திட்டங்கள் இந்தியாவை விட்டு வெளியேறி பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளுக்குச் சென்றதில், துவங்கி ஹெச்1பி விசா பிரச்சனை, தற்போது ஆட்டோமேஷன் வரை கடந்த 5 வருடத்தில் இந்த 160 பில்லியன் டாலர் ஐடித்துறை மிகப்பெரிய சரிவு பாதையை நோக்கிப் பயணிப்பதாகத் தெரிகிறது.

ஐடி உலகம்

ஐடி உலகம்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+