பெங்களுரூ: பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருந்தாலும், இதன் வர்த்தகம் மற்றும் லாப அளவுகள் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் சாயம் வெளுக்கத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்திய சந்தையில் இருக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நிதி நெருக்கடி, மதிப்பீடு குறைப்பு மற்றும் மோசமான பிஆர் போன்ற பல பிரச்சனைகளைச் சந்தித்து, மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதனால் பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், ஓலா, போன்ற பெரு நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் இருக்கும் பல உயர் அதிகாரிகள் போதும்டா சாமி.. ஸ்டார்ட்-அப் நிறுவனங்களே வேண்டாம் என வெளியேறியுள்ளனர்.
ஸ்னாப்டீல்
2016ஆம் ஆண்டின் ஜனவரி மாத்தில் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவின் உயர் துணை தலைவர் ஸ்ரீநிவாச மூர்த்தி நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
ஹவுசிங்.காம்
நாட்டின் முன்னணி ஆன்லைன் ரயில் எஸ்டேட் நிறுவனமான ஹவுசிங்.காம் நிறுவனத்தின் பிராடெக்ட் டெவலப்மென்ட் தலைவர் அமித் தாஸ் வெளியேறினார். அவரும் ஜனவரி மாத்தில் போதும்டா சாமி என்றும் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
முகேஷ் பன்சால்
அதேபோல் பிப்ரவரி மாதம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகத் தலைவர் மற்றும் மின்திரா நிறுவனத்தின் தலைவர் முகேஷ் பன்சால் வெளியேறியுள்ளார்.
அன்கித் நகோரி
இதே நிறுவனத்தில் தலைமை வர்த்தக அதிகாரியான அன்கித் நகோரி பிளிப்கார்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
ஏப்ரல் மாதம்
பிளிப்கார்ட் நிறுவனம் தனது வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையச் செய்ய அதிகச் சம்பளத்தில் நியமிக்கப்பட்ட புனித் சோனி வெறும் 13 மாதங்களில் இந்நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி பொறுப்பில் இருந்து வெளியேறினார்.
மனீஷ் மகேஷ்வரி
இதே பிளிப்கார்ட் நிறுவனத்தின் விற்பனை வர்த்தகப் பிரிவின் தலைவர் மனீஷ் மகேஷ்வரி ஏப்ரல் மாதத்தில் வெளியேறினார்.
மே மாதம்
இன்மொபி (InMobi) நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான மனீஷ் துகார் இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.
பொறியியல் துணை தலைவர்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் பொறியியல் துணைத் தலைவரான சரத் சிங் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக நிறுவனத்தை விட்டு மே மாதம் வெளியேறினார்.
ஓலா கேப்ஸ்
ஆன்லைன் டாக்ஸி சேவை அளிக்கும் ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் Central Analytics குழுவின் தலைவர் Suvomoy Sarkar இந்நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
இன்மொபி
இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சமூவேல் ஜான் இன்மொபி நிறுவனத்தில் இருந்து மே மாத்தில் வெளியேறினார்.
பேடிஎம்
2016ஆம் ஆண்டில் கடைசியாகப் பேடிஎம் நிறுவனத்தின் உயர் துணை தலைவரான விகாஸ் புரோஹித் ஜூன் மாதத்தில் வெளியேறினார்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications