17 பொதுத்துறை வங்கிகளில் ஊழியர் இயக்குனர் பணியிடம் காலியாக உள்ளது..!
மும்பை: நாட்டில் 25 பொதுத்துறை வங்கிகளில் 17 வங்கிகளில் அதிகாரி-ஊழியர் இயக்குனர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது.
இப்பணியிடங்களை முழுமையாகவும் விரைவாகவும் நிரப்ப அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் அமைப்பு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனிடம் வங்கி ஊழியர்கள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் ரகுராம் ராஜன்வங்கி ஊழியர்கள் அமைப்பின் உறுப்பினர்களின் கோரிக்கை ஏற்று அரசிடம் இதுகுறித்துப் பேசுவதாகவும் பதில் அளித்தாகவும் இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் ஹர்விந்தர் சிங் கூறினார்.
25 பொதுத்துறை வங்கிகளில் 5 ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் 5 இணைப்பு வங்கிகளும் அடக்கம்.


Click it and Unblock the Notifications