டெல்லி: தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் அமைப்பிற்கும், டெலிகாம் நிறுவனங்களுக்கு மத்தியில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது கால் டிராப் பிரச்சனை குறித்த விவாதங்கள் தற்போது முடிவடையும் நிலையை எட்டியுள்ளது.
டிராய் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் கூட்டமைப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் கால் டிராப் பிரச்சனைக்குத் தீர்வாக 12,000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிதாக 60,000 டெலிகாம் டவர்களை நிறுவ டெலிகாம் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.
கால் டிராப் என்றால் என்ன..?
மொபைல் போனில் பேசிக்கொண்டு இருக்கும் போது தொழில்நுட்ப காரணங்களால் அழைப்பு தடைப்படுவது தான் கால் டிராப். இது இயல்பாக நடந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை, தொலைத்தொடர் நிறுவனங்கள் அதிகப் பணம் வசூல் செய்ய வேண்டுமென்ற இணைப்பைத் துண்டிக்கிறது.
இத்தகைய மோசடியைத் தடுக்கவே டிராய், கால் டிராப் பிரச்சனையைச் சந்திக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இனி இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
டிராய் கண்டிப்பு
நாட்டில் கால் டிராப் மூலம் டெலிகாம் நிறுவனங்கள் மறைமுகமாக வருடத்திற்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் சம்பாதிப்பதாக டிராய் தனது ஆய்வில் கண்டுபிடித்துள்ளது.
ஆனால் இதனை டெலிகாம் நிறுவனங்கள் திட்டவட்டமாக மறுத்தது.
அபராதம்
இதன் பின் டிராய் அமைப்பு வாடிக்கையாளர் சந்திக்கும் அழைப்பு அல்லது இணைப்புத் தடைப்படும் ஒவ்வொரு நிகழ்வுக்கு ஒரு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். உச்சவரம்பாக ஒரு நாளுக்கு மூன்று ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் வருடத்திற்கு 1,000-1,500 கோடி ரூபாய் வருமானம் இழப்பீடு ஏற்படும் என்பதை உணர்ந்த டெலிகாம் நிறுவனங்கள் இக்கட்டண அமலாக்கத்திற்கு நீதிமன்றத்தில் தடை கோரியது.
டிராய் - டெலிகாம் நிறுவனங்கள்
இதுகுறித்துக் கடந்த 6 மாதங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியாவில் உள்ள அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் சேர்ந்து 12,000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிதாக 60,000 டவர்களை நிர்ணயம் செய்ய மொபைல் நெட்வொர்கை தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் முழுமையாக 100 நாட்களுக்குள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளது.
சந்திப்பு
டிராய் - டெலிகாம் நிறுவனங்கள் சந்திப்பில் ஏர்டெல், பிஎஸ்என்எல், ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ, வோடாபோன் ஆகிய நிறுவனங்களின் சீஇஓ பங்குபெற்றனர்.
3 மாதம் அல்லது 100 நாட்கள்
60,000 மொபைல் டெவர்கள் அமைக்கும் பணி முழுமையாக முடிந்த பின் டிராய் அமைப்பு கால் டிராப் பிரச்சனை உள்ளதா என்பதை மறு ஆய்வு செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
1.50 லட்சம் டவர்கள்
இத்திட்டத்தில் சுமார் 1.50 லட்சம் டவர்களைத் தொழில்நுட்ப உதவியுடன் ஆட்டோமேட்டட் செய்யப்படும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications