6 பில்லியன் டாலருக்கு ஓகே சொன்னது 'ஏர்செல்'.. மகிழ்ச்சியின் உச்சத்தில் 'அனில் அம்பானி'..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்(ஆர்காம்) நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்திற்கு ஒப்புக்கொண்ட நிலையில் ஆர்காம் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது.

 

கடந்த 4 மாத காலமாகப் பலகட்ட பேச்சுவார்த்தை மற்றும் குழப்பங்களைத் தாண்டி நடந்து வரும் இப்பேச்சுவார்த்தை, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்குச் சாதகமாக அமைந்துள்ளது. இதன் மூலம் அனில் அம்பானியின் கனவு நிறைவேறப்போகிறது.

ஏர்செல்- ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

ஏர்செல்- ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

இந்திய டெலிகாம் துறையிலேயே மிகப்பெரிய கைப்பற்றுதல் திட்டமாக இருக்கும் ஏர்செல்- ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் திட்டம் ஏர்டெல், ஐடியா, வோடாபோன் போன்ற பல நிறுவனங்களுக்கு வர்த்தகத்திலும் சரி, வாடிக்கையாளர் மத்தியிலும் சரி மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.

ஏர்டெல் உடன் போட்டி

ஏர்டெல் உடன் போட்டி

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டெலிகாம் சந்தையில் ஏர்டெல் நிறுவனத்திற்கு இணையாக வளர்ச்சி அடையவும், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக உருவெடுக்கவும் திட்டமிட்டு கடந்த சில மாதங்களாகப் பல பணிகளைச் செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாகச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் இயங்கி வரும் ஏர்செல் நிறுவனத்தைக் கைப்பற்ற பேச்சுவார்த்தையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் துவங்கியது.

 

அனில் அம்பானி
 

அனில் அம்பானி

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரான அனில் அம்பானி கடந்த சில நாட்களாகத் தனது டெலிகாம் வர்த்தகத்தை அனைத்து வழிகளிலும் விரிவாக்கம் செய்து வருகிறார்.

சமீபத்தில் ரஷ்ய சிஸ்டமா நிறுவனத்தின் இந்திய கிளை வர்த்தக நிறுவனமான எம்டிஎஸ் நிறுவனத்தை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 4,500 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

 

 230 மில்லியன் வாடிக்கையாளர்

230 மில்லியன் வாடிக்கையாளர்

இந்தக் கூட்டணி மூலம் இந்திய டெலிகாம் சந்தையில் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் ஏர்டெல் நிறுவனத்திற்கு இணையாக உயர முடியும்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்-ஏர்செல் கூட்டணியின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 200 மில்லியன், ஏர்டெலின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 230 மில்லியன் மட்டுமே. இதனால் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உருவெடுக்கும்.

 

ஜூன் 22

ஜூன் 22

6 பில்லியன் டாலர் டீல்-க்கு ஒப்புக்கொண்ட ஏர்செல் நிறுவனம், ஜூன் 22ஆம் தேதி வரையில் இந்த ஒப்புந்தம் குறித்த முக்கியப் பேச்சுவார்த்தைகள் இரு நிறுவனங்கள் மத்தியில் நடக்க உள்ளது.

இப்பேச்சுவார்த்தையில் வர்த்தகம் மற்றும் ஒப்பந்த சட்டங்கள் குறித்த முக்கியமான ஆலோசனைகள் செய்யப்படும் எனத் தெரிகிறது.

 

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

இத்திட்டத்தின் படி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என்னும் ஆர்காம் நிறுவனம் தனது வையர்லெஸ் வர்த்தகத்தைத் தனியாகப் பிரித்துத் தனிப் பிரிவாகச் செயல்படுத்த உள்ளது.

அதாவது ஆர்காம் நிறுவனத்தில் டவர் வர்த்தகம், சர்வதேச வர்த்தகம், ஆழ்கடல் கேபிள் வர்த்தகத்தைத் தனியாகவும், வையர்லெஸ் வர்த்தகத்தைத் தனியாவும் பிரித்து இரு வர்த்தகப் பிரிவுகளாகச் செயல்படுத்த உள்ளது.

 

படிக்காதீங்க

படிக்காதீங்க

கடைசி ஸ்லைடரை மட்டும் படிக்காதீங்க.. 

வையர்லெஸ் வர்த்தகப் பிரிவு

வையர்லெஸ் வர்த்தகப் பிரிவு

ஆர்காம் நிறுவனத்தின் வையர்லெஸ் வர்த்தகப் பிரிவு ஏர்செல் நிறுவனத்துடன் 50:50 என்ற உரிமை அடிப்படையில் இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்ய உள்ளது. இப்புதிய பிரிவிற்குப் புதிய பெயர் சூட்டப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கடன்

கடன்

இரு நிறுவனங்களின் கடன் சுமைகளைக் குறைக்க ஏர்செல் மற்றும் ஆர்காம் தலா 14,000 கோடி ரூபாயை இப்புதிய கூட்டணி நிறுவனத்தில் உட்செலுத்த உள்ளது. இப்புதிய கூட்டணி நிறுவனத்தில் 10 சதவீத பங்குகள் ரஷ்யா சிஸ்டமா நிறுவனத்திடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

12 சதவீத சந்தை

12 சதவீத சந்தை

இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்செல் நிறுவனத்திடம் இருக்கும் 12 சதவீத சந்தை வர்த்தகத்திற்கு 6 பில்லியன் டாலர் தொகையை ஆர்காம் அளித்துள்ளது.

அடுத்தச் சில வருடங்களில் இப்புதிய கூட்டணியின் மூலம் சந்தை மதிப்பு 40-50 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

2,500 கோடி ரூபாய் செலவு குறைப்பு..

2,500 கோடி ரூபாய் செலவு குறைப்பு..

இப்புதிய கூட்டணியின் மூலம் இரு நிறுவனங்கள் மத்தியிலான செலவுகளை வருடத்திற்குச் சுமார் 2,500 கோடி ரூபாய் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

ரூ.25,000 கோடி வருமானம்

ரூ.25,000 கோடி வருமானம்

மேலும் ஏர்செல்-ஆர்காம் இணைப்பு முழுமையாக முடிந்த அடுத்தச் சில ஆண்டுகளில் இக்கூட்டணி நிறுவனத்தின் வருமானம் 25,000 கோடி ரூபாய் வரை எட்டும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெக்டரம் கையிருப்பு

ஸ்பெக்டரம் கையிருப்பு

மேலும் இந்தியாவின் மொத்த ஸ்பெக்ட்ரம் பங்கீட்டில் ஆர்காம்-ஏர்செல்-சிஸ்டமா கூட்டணியிடம் மட்டும் சுமார் 20 சதவீத ஸ்பெக்ட்ரம் இருக்கும்.

இதனால் இந்தியாவில் அதிக ஸ்பெக்ட்ரம் கொண்டது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தான்.

 

ஐடியா உடன் போட்டி

ஐடியா உடன் போட்டி

அதேபோல் வருவாய் அளவுகளில் இக்கூட்டணி ஐடியா செல்லுலார் நிறுவனத்திற்கு இணையாக உயர உள்ளது.

ஏர்செல்

ஏர்செல்

1999ஆம் ஆண்டுச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் சிந்தியா செக்கூரிட்டீஸ் நிறுவனங்களின் முதலீட்டில் சி.சிவசங்கரன் தலைமையில் ஏர்செல் நிறுவனம் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 83 மில்லியனாக உயர்ந்து நாட்டின் 5 வது மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாகத் திகழ்கிறது.

 

பங்குதாரர்கள்

பங்குதாரர்கள்

ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் (74 சதவீத பங்குகள்) மற்றும் பிரதாப் ரெட்டி குடும்பத்தின் (அப்பலோ மருத்துவமனை) சிந்தியா செக்கூரிட்டீஸ் ஆகியோர் முக்கியப் பங்குதாரர்களாக உள்ளனர்.

ரிலையன்ஸ் ஜியோ உடன் அனில் அம்பானி

ரிலையன்ஸ் ஜியோ உடன் அனில் அம்பானி

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தன்வசம் உள்ள ஸ்பெக்டரத்தை ‘trading and sharing' முறையில் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் 4ஜி சேவைக்காகப் பிகிர திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் டெலிகாம் மற்றும் மொபைல் வர்த்தகத்தில் ரிலையன்ஸ் ஜியோ -ஆர்காம்-ஏர்செல்-சிஸ்டமா ஆகியவை மறைமுகமாக ஒன்றிணைய உள்ளது.

 

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

உங்கள் மின்னஞ்சலைத் தேடி வரும் வர்த்தக உலகம்..!


 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anil Ambani-led RCOM and Aircel may complete $6-billion merger by July

Anil Ambani led Reliance Communications Ltd (R-Com) and Aircel are in advance negotiations to finalise their much anticipated merger by this early next month, paving the way what would be the first in-market telecom merger of national scale in the country, said officials in the know.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X