இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய செயற்கை நுண்ணறிவு தளம் 'MANA'..!

பெங்களூரு: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் தனது புதிய செயற்கை நுண்ணறிவு தளம் MANAவின் வளர்ச்சி இந்நிறுவனத்தின் மிகப்பெரிய வர்த்தகத் துறையாக உருமாறும் என நம்புகிறது.

இத்துறையின் வளர்ச்சிக்கு ஸ்திரமான அடித்தளத்தை அமைக்கும் வாயிலாக , இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைப் போலவே அமெரிக்கச் சிலிக்கான் வேலி நிறுவனங்களில் இருந்து MANA பிரிவிற்கு உயர் அதிகாரிகளைப் பணியில் அமர்த்தி வருகிறது.

இன்போசிஸ் - ஐபிஎம்

இன்போசிஸ் - ஐபிஎம்

இன்போசிஸ் புதிதாக உருவாக்க உள்ள இந்த MANA, இந்திய சந்தை மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தையிலும் ஐபிஎம் வாட்சன் தொழில்நுட்பத்திற்கு மிகப்பெரிய போட்டியாக இருக்கும் என இன்போசிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 கூகிள் தலைகள்

கூகிள் தலைகள்

இப்புதிய செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கவும், மேம்படுத்தவும் இன்போசிஸ் நிறுவனம் அமெரிக்கச் சிலிக்கான் வேலி பகுதியை சேர்ந்த முக்கிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளைப் பணியில் அமர்த்தியுள்ளது.

இதன் படி கூகிள் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரான சுதிர் ஜா MANA பிராஜெக்டில் உயர் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனுடன் பல முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகளும் இத்திட்டத்தில் நியமிக்கப்பட உள்ளனர்.

 

அப்துல் ரசாக்

அப்துல் ரசாக்

இந்நிலையில் MANA தளத்தின் அனைத்து வளர்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளுக்கு எஸ்ஏபி நிறுவனத்தில் இன்போசிஸ்க்கு இணைந்த அப்துல் ரசாக் தலைமை விகிப்பார்.

மேலும் இத்திட்டத்தில் இருக்கும் அனைத்து உயர் அதிகாரிகளும் அப்துல் ரசாக் தலைமையின் கீழ் இயங்குவார்கள் என இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

 

விஷால் சிக்கா

விஷால் சிக்கா

மேலும் இப்பிரிவில் இந்தியாவில் இருந்தும் சிலிக்கான் வேலியில் இருந்தும் முக்கிய அதிகாரிகளை விஷால் சிக்கா அறிவுறுத்தலின் பெயரில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளது என் கிளவுட் இன்பராஸ்டக்சர் மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் சாம்சன் டேவிட் கூறினார்.

புதிய தொழில்நுட்பம்

புதிய தொழில்நுட்பம்

இன்போசிஸ் பல ஆண்டுகளாகச் சேவைத் துறையை மையமாக வைத்துக் கொண்டே தனது வர்த்தகத்தைச் செய்து வந்தது. விஷால் சிக்கா நியமனத்திற்குப் பின் இன்போசிஸ் புதிய தொழில்நுட்பத்தில் கால்தடம் பதிக்க முடிவு செய்துள்ளது.

முதல் படி

முதல் படி

புதிய தொழில்நுட்பத்தில் இறங்கும் முன் இத்துறையில் திறமையான மற்றும் தலைசிறந்த வல்லுனர்களை நியமித்தார் விஷால் சிக்கா. இதன் பின்னரே தத்தம் துறையில் வளர்ச்சிக்கான பணிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள்

இன்போசிஸ் நிறுவனத்தைப் போலவே இந்திய சந்தையில் இருக்கும் விப்ரோ, டிசிஎஸ், எச்சிஎல் போன்ற முன்னணி நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்தில் இறங்கத் திட்டமிட்டு வருகிறது.

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+