டெல்லி: 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கத்தின் அளவு எதிர்பாராத வகையில் 5.76 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இதனால் ஆகஸ்ட் மாதத்தில் நடக்கவிருக்கும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை மறுஆய்வுக் கூட்டத்தில் வட்டி குறைப்பை நாம் எதிர்பார்க்க முடியாது.
சில்லறை பணவீக்கம்
கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் சில்லறை பணவீக்கம் 5.01 சதவீதமாகவும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தில் 5.47 சதவீதமாக இருந்தது ஆனால் 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் இதன் அளவு 5.76 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் உணவுப் பொருட்களில் ஏற்பட்டுள்ள விலை உயர்வுதான்.
உணவுப் பொருட்கள்
2016ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தை விடவும் (6.40%) மே மாதத்தில் உணவுப் பொருட்களின் மீதான பணவீக்கம் 7.55 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
நுகர்வோர் பணவீக்கம்
ரிசர்வ் வங்கி இலக்கு படி 2016-17ஆம் நிதியாண்டில் நுகர்வோர் பணவீக்கம் 5 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் நிலையில், அடுத்து வரும் மாதங்களில் நாட்டில் பதிவாகியுள்ள சராசரி அளவுகளுக்கு அதிகமான பருவ மழையின் மூலம் உணவுப் பொருட்களின் விலை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நுகர்வோர் பணவீக்கத்தில் 47 சதவீத பங்கீடு உணவு பொருட்களுக்குரியது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வு
கடந்த ஒரு மாத காலத்தில் பருப்பு விலை கடந்த வருடத்தை விடவும் 31.57 சதவீதம் அதிகமாக உள்ளது. அதேபோல் சர்க்கரை (13.96%) காய்கறிகள் (10.77%) விலை அதிகரித்துள்ளது.
ரிசர்வ் வங்கி
இந்நிலையில் அடுத்த வரும் மாதங்களில் நாட்டின் உணவுப் பொருட்களின் விலை குறைப்பு மற்றும் பருவ மழை ஆகியவற்றைப் பெருத்தே ஆகஸ்ட் மாதத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூஸ்லெட்டர்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications