பெங்களூரு: கேப்ஜெமினி ஐகேட் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றிய பின் ஐகேட் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய சீஇஓ அசோக் வெமூரி, தற்போது 7 பில்லியன் டாலர் வர்த்தக மதிப்புடைய ஜெராக்ஸ் பிபிஓ நிறுவனத்தின் புதிய சீஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டின் முடிவிற்குள் ஜெராக்ஸ் நிறுவனம் தனது வர்த்தகத்தை இரண்டாகப் பிரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் பின் இந்நிறுவனத்தின் பிபிஓ வர்த்தகத்திற்குச் சீஇஓ-வாகப் பொறுப்பேற்றக்க உள்ளார். இவர் முன்னாள் இன்போசிஸ் உயர் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய சந்தையில் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் கேப்ஜெமினி தனது ஆசிய மற்றும் அமெரிக்கச் சந்தை வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய அசோக் வெமூரி சீஇஓ-வாக இருந்த ஐகேட் நிறுவனத்தைக் கைப்பற்றியது. இதன் பின் சில நாட்களிலேயே நிறுவனத்தை விட்டு வெளியேறிய அசோக் வெமூரி, ஜூலை 1 ஆம் தேதி ஜெராக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் துணைத்தலைவராகப் பணியில் சேர உள்ளார். சர்வதேச சந்தையில் மிகப்பெரிய வன்பொருள் மென்பொருள் வர்த்தகத்தைச் செய்த வரும் ஜெராக்ஸ், 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் தனது மொத்த வர்த்தகத்தையும் 2ஆகப் பிரிக்க முடிவு செய்துள்ளது. இதில் வர்த்தகச் சேவைகள் ஒரு நிறுவனமாகவும், வன்பொருள் மற்றும் டாக்குமென்ட் தொழில்நுட்பம் ஒரு நிறுவனமாகவும் பிரிக்கப்பட உள்ளது, இதில் பிரிட்னட் மற்றும் காப்பியர்ஸ் வர்த்தகமும் அடக்கம். ஜெராக்ஸ் நிறுவன பிரிவிற்குப் பின், இந்நிறுவனத்தின் புதிதாகப் பிரிக்கப்பட்டுள்ள பிபிஓ நிறுவனத்திற்கு அசோக் வெமூரி சிஇஓ மற்றும் நிர்வாகத் தலைவராக நியமிக்கப்பட உள்ளார். இதற்காக அசோக் வெமூரி அடைப்படை சம்பளமாக வருடத்திற்கு 1 மில்லியன் டாலரும், ஊக்கத்தொகை மற்றும் போன்ஸ் தொகையாக வருடத்திற்கு 2.5 மில்லியன் டாலரும் பெற உள்ளார். இந்திய சந்தையில் மென்பொருள் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் இன்போசிஸ் நிறுவனத்தில் அசோக் வெமூரி 1999 முதல் 2013 வரை பல உயர் பதவிகளில் பணியாற்றினார். இந்நிறுவனத்தில் புதிய சீஇஓ நியமனம் செய்யும் குழப்பத்தில் இன்போசிஸ் வேண்டாம் என வெளியேறி ஐகேட் நிறுவனத்தில் இணைந்தார். ஜூலை 2015ஆம் ஆண்டுக் கேப்ஜெமினி ஐகேட் நிறுவனத்தைக் கைப்பற்றியதால் தற்போது இக்கூட்டணி நிறுவனத்தில் இருந்து வெளியேறி ஜெராக்ஸ் நிறுவனத்தில் இணைந்துள்ளார். சர்வதேச அளவில் 275 பில்லியன் டாலர் வர்த்தகச் சந்தையான பிபிஓ துறையில் அசோக் வெமூரி தலைமையிலான ஜெராக்ஸ் பிபிஓ நிறுவனம் குதிக்கப்போகிறது. ஜெராக்ஸ் நிறுவனத்தில் இருக்கும் 1,43,600 ஊழியர்களில் 72 சதவீதம் பேர் பிபிஓ வர்த்தகத்தைச் சார்ந்தவர்கள், இதில் 15,000 ஊழியர்கள் இந்திய வர்த்தகத்தில் பணியாற்றி வருகின்றனர். அசோக் வெமூரியின் தேர்வு, இந்திய சந்தையில் இந்நிறுவனத்தின் வர்த்தகத்தை மேம்படுத்தவே எனக் கருதப்படுகிறது. உலகின் பல நாடுகளில் வர்த்தகம் செய்து வரும் ஜெராக்ஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 18 பில்லியன் டாலர். இதனையே 2ஆகப் பிரிக்க வேண்டும் என ஜெராக்ஸ் உயர்மட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் நிறுவனத்தில் 2.4 பில்லியன் டாலர் செலவின குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.
அசோக் வெமூரி
ஜெராக்ஸ்
பிபிஓ
சம்பளம்
இன்போசிஸ் முதல் ஜெராக்ஸ் வரை..
275 பில்லியன் டாலர்
ஜெராக்ஸ் பிபிஓ
ஜெராக்ஸ்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications