இனி பிபிஎப் வைப்பு தொகையை 5 வருடத்திற்குப் பின் திரும்பப்பெறலாம்.. ஆனால் ஒரு கண்டிஷன்..!

டெல்லி: பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிபிஎப் திட்டத்தில் வைப்புச் செய்யப்பட்ட பணத்தை முதிர்வு காலம் முடியும் முன்னரே திரும்பப்பெற மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஆனால்...

வைப்புக் காலம்

வைப்புக் காலம்

பிபிஎப் கணக்கில் வைப்புச் செய்யப்பட்ட பணத்தை முதிர்வு காலம் முடியும் முன்னர்த் திரும்பப்பெற விரும்பும் நபர், 5 ஆண்டுகள் வைப்புக்காலம் முடிந்த பின் இத்தொகையை முழுமையாக வட்டி வருமானத்துடன் எடுத்துக்கொள்ளலாம் என நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் ஒரு கண்டிஷன்..!

என்ன கண்டிஷன்..?

என்ன கண்டிஷன்..?

பிபிஎப் கணக்காளர் தனது கணக்கில் இருக்கும் பணத்தை அவரச மருத்துவச் செலவு அல்லது கல்வி செலவுகளுக்காக 5 ஆண்டு வைப்புக் காலம் முடிந்தபின் முழுமையாகத் திரும்பப்பெறலாம்.

ஆனால் பிபிஎப் கணக்கில் வைப்புச் செய்யப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறும் போது கல்வி செலவிற்கான பில் அல்லது மருத்துவச் செலவிற்கான பில்களை முறையாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

அபராதம்

அபராதம்

இப்படி முதிர்வு காலம் முடியும் முன்னரே வைப்புத் தொகையை எடுக்கும் போது அபராதமாக 1 சதவீத வட்டி குறைவாக அளிக்கப்படும். மேலும் 5 ஆண்டுக் காலம் முடிந்த பின்னர் நீங்கள் விரும்பினால் (அவரச மருத்துச் செலவு அல்லது கல்வி செலவுகளைக் காரணம் காட்டி) கணக்கைக் கூட மூட மத்திய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.

பழைய விதிமுறைகள்

பழைய விதிமுறைகள்

இதற்கு முன் இக்கணக்கில் வைப்புச் செய்யப்பட்ட பணத்தை நாம் 15 வருடம் முதிர்வு காலம் முடிந்த பின்னரே எடுக்க முடியும். மேலும் 7 வருடத்திற்குப் பின்புதான் கணக்கில் வைப்பு செய்யப்பட்டுள்ள 50% தொகையை எடுத்துக்கொள்ள முடியும், மீதமுள்ள தொகையை 15 வருட காலம் முடிந்த பின்னரே கிடைக்கும்.

தற்போது இதனை அவரச மருத்துச் செலவு அல்லது கல்வி செலவுக்காக மட்டும் 5 ஆண்டுக்குள் திரும்பப்பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

 

வரிச் சலுகை

வரிச் சலுகை

பிபிஎப் கணக்கில் ஒரு வருடத்திற்கு 500 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்யலாம். நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும். சந்தையில் இருக்கும் பிற முதலீட்டு திட்டங்களை போல் அல்லாமல், இத்திட்ட முதலீட்டுக்கு கிடைக்கும் வட்டி வருமானத்திற்கும் வரிச் விலக்கு உண்டு. இதன் காரணமாக தான் மக்கள் மத்தியில் இத்திட்டத்திற்கு மிகப்பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது.

வட்டி வருமானம்

வட்டி வருமானம்

இத்திட்டத்தில் கிடைக்கும் வருமானம் ஒவ்வொரு வருடமும் மாறுபடும். நடப்பு நிதியாண்டில் பிபிஎப் கணக்கிற்கு 8.1 சதவீதம் வட்டி அளிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு வருடமும் மாறுபடும். இதனால் வட்டி வருமானமும் மாறுபடும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+