டெல்லி: நாட்டின் முன்னணி மலிவு விலை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், உள்நாட்டுப் பயணிகள் சேவையில் புதிதாக 5 நாள் மழைக்கால விற்பனை திட்டத்தை அறிவித்துள்ளது.
444 ரூபாயில் விமானப் பயணம்
ஸ்பைப்ஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ள இப்புதிய சலுகை திட்டத்தின் கீழ் 444 ரூபாய் என்ற அடிப்படை கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு விமானச் சேவையை அளிக்க முடிவு செய்துள்ளது. இக்கட்டணத்தில் வரி மற்றும் இதர கட்டணங்கள் அடங்காது.
ஜூன் 26ஆம் தேதி வரை..
ஜூலை 1 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான காலத்தில் மேற்கொள்ளப்படும் பயணத்திற்கு இச்சலுகையைப் பெறலாம். மேலும் இந்தச் சலுகை வருகிற ஜூன் 26ஆம் தேதி நள்ளிரவு வரை மட்டுமே.
சலுகை பெறும் வழித்தடங்கள்
அதுமட்டும் அல்லாமல் இச்சலுகை, ஜம்மு-ஸ்ரீநகர், அகமதாபாத்-மும்பை, மும்பை-கோவா, டெல்லி-டேராடூன் மற்றும் டெல்லி-அமிர்தசரஸ் ஆகிய வழித்தடங்களில் மட்டுமே எனவும் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.
வரி மற்றும் கட்டணங்கள்
ஸ்பைஸ்ஜெட் இணையதளத்தைப் பார்க்கும் போது, டெல்லி-அமிர்தசரஸ் வழித்தடத்தில் இச்சலுகையின் கீழ் ஜூலை மாதத்தில் 2,100 ரூபாயும், ஆகஸ்ட் மாதம் 1,300 ரூபாயும் மொத்தமாக வசூல்செய்யப்படுகிறது. அடுத்த ஒரு வாரத்திற்கு இதன் கட்டணம் 3,200 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
511 ரூபாய்
கடந்த மாதம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 11ஆம் ஆண்டு நிறைவு நாளை கொண்டாடும் வகையில், ஸ்பைஸ்ஜெட் 511 ரூபாய் என்ற சலுகை திட்டத்தை அறிமுகம் செய்தது.
ஜூலை-செப்டம்பர்
விமானப் போக்குவரத்தில் மிகவும் குறைவாகப் பயணிகள் எண்ணிக்கைக் கொண்ட ஜூலை-செப்டம்பர் மாத காலகட்டத்தில் அதிகப் பயணிகளை ஈர்க்கவே இத்தகையைச் சலுகைகளை விமான நிறுவனங்கள் அளிக்கிறது.
இண்டிகோ
இதேபோல் இண்டிகோ நிறுவனமும் சில முக்கிய வழித்தடத்தில் 789 ரூபாய் என்ற சலுகை கட்டணத்தில் விமானச் சேவையை அளிக்கிறது.


Click it and Unblock the Notifications